28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
190779301098096bdea974467d259d80cc3fcf853968773338
அழகு குறிப்புகள்ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா பிறந்த குழந்தையை தூளியில் தூங்கவைப்பது நல்லதா கெட்டதா?

தன் தாயின் வயிற்றில் 9 மாதத்துக்கும் மேல் இருந்த குழந்தை, பிறந்த பின் படுக்கையிலோ தாயின் மடியிலோ தூளியிலோ சரியாக தூங்குமா?

நமது பாரம்பர்ய தொட்டில் (தூளி) தான் குழந்தைக்கு ஏற்றது. ஏன் என்றால் குழந்தை வயிற்றில் இருக்கும் போது இருக்கும் நிலையில் நம் பாரம்பர்ய தொட்டிலான தூளியே அதைக் கொடுக்கும். கட்டில் போன்ற சமதளமான தொட்டில் குழந்தைக்கு அவ்வளவாகப் பொருந்தாது. நம் பாரம்பர்ய தொட்டில் முறையான தூளியில் குழந்தையை போட்டால், குழந்தைகளின் உடல் வளர்ச்சி சீராக இருக்கும். தூளியில் போட்டு வளர வைக்க கூடிய குழந்தைகளுக்கு முதுகில் வலி குறைவாக காணப்படும்.

190779301098096bdea974467d259d80cc3fcf853968773338

தாயின் வயிற்றில் பனிக்குட நீரில் இருந்த குழந்தை, பந்து போல சுருண்டிக்கொண்டு 9 மாதங்கள் இருந்து பழகி இருக்கும்.

திடீரென்று தன் படுக்கை நிலை மாறவே குழந்தைக்கு புதிதாகவும் இயல்பற்றதாகவும் இருக்கும். பிறந்த குழந்தைகளை சமதளமான தொட்டிலில் படுக்க வைக்கும் போது, குழந்தைகளுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

தூளி முன்னும் பின்னும் ஆடுவதால் குழந்தையின் கேட்கும் திறன் அதிகரிக்கும். குழந்தை தூளியில் சிறுநீர் கழித்துவிட்டால், தூளியிலிருந்து சிறுநீர் வடிந்து, தரைக்கு வந்துவிடுவதால் குழந்தையின் உடலில் ஈரம் தங்காமல் தடுக்கப்படுகிறது. புரண்டாலும் குழந்தை கீழே விழ வாய்ப்பில்லை. குழந்தைக்கு தூளி பெஸ்ட். குழந்தையை தூளியில் படுப்பதால் காலும் தலையும் சற்று உயர்ந்தும் வயிறும் முதுகும் பள்ளமான இடத்தில் இருப்பதால் குழந்தை உண்ட உணவை வாந்தி எடுக்காமல், குழந்தையால் நிம்மதியாகத் தூங்க முடிகிறது. தாயோ, தூளியை ஆட்டுபவரோ தூளியை ஆட்ட குழந்தையால் தன் நேர் கண்ணால் பார்க்க முடியும். இதனால் மாறு கண் பிரச்னை வராமல் தடுக்கப்படுகிறது.

தூளி, படுக்கும் குழந்தைகளுக்கு தாயின் மார்ப்போடு ஒட்டி இருப்பது போன்ற உணர்வு இருக்கும். ஒருவித கதகதப்பான உணர்வு அவர்களுக்கு கிடைக்கும். குழந்தையின் முதுகு எலும்பு வளைவுகள், சரியாகத் தூளியில் பதிவதால் குழந்தைக்கு சௌகரியமாக இருக்கும். தூளியில் படுத்திருந்தால் நெருக்கமான ஒரு உணர்வு குழந்தைக்கு கிடைக்க, குழந்தை நன்கு தூங்கும்.

தூளியில் தூங்கும் குழந்தைக்கு மன அமைதி கிடைக்கும். நவீன தொட்டில் முறை, மெத்தையைவிட தூளியே குழந்தைக்கு ஆரோக்கியத்தைத் தரும். இதனுடன் பாதுகாப்பானதும்கூட.

Related posts

காது கேளாமைக்குக் காரணம் என்ன?

sangika

வெளிவந்த தகவல் ! நடிகர் சூரி வீட்டில் நகை திருடிய ‘பப்ளிசிட்டி திருடன்’ சிக்கியது எப்படி?

nathan

பருத்தழும்புகள் ஏற்படுவதை முற்றிலும் தவிர்க்க நிரந்தர சிகிச்சை!…

sangika

மாம்பழ கடலை மாவு பேஸ் பேக் இயற்கை முக அழகு குறிப்புக்கள்.!!

nathan

வெயிலைக்கூட சமாளிக்க இந்த இலை ஒன்றே போதும்……

sangika

பெண்களே ஆண்களுடன் பழகும் போது…இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்…!

nathan

மூலிகை ரகசியம் – 20.. ஆரோக்கியம் தரும் ஆலமரம்… பற்களின் வலிமைக்கு உரம்…

nathan

இந்த ஆயுர்வேத வீட்டு வைத்தியங்கள் உங்கள ஹீரோயின் மாதிரி ஜொலிக்க வைக்குமாம்

nathan

மாமியாரின் தகாத செயல்.. கண்டித்த மருமகளுக்கு நேர்ந்த கொடுமை;

nathan