நமது உடலில் ஏற்படும் பல்வேறு விதமான நோய்களுக்கு இயற்கையே பல்வேறு தீர்வுகளை கொடுத்துள்ளது. இயற்கை தரும் தீர்வுகளை தவிர்த்துவிட்டு பல்வேறு நேரங்களில் தேவையற்ற செலவுகளை செய்து வருகிறோம்.
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் சந்தித்து வரும் தலையாய பிரச்சினைகளில் ஒன்று தலை முடி கொட்டுவது. தலைமுடி கொட்டுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் நமது தலையிலிருக்கும் பொடுகு மிக முக்கிய காரணம்.
பொடுகை எப்படி நீக்குவது?
நமது வீட்டில் சாதாரணமாக கிடைக்கும் தயிர், வெந்தயம் மற்றும் எலுமிச்சை இவற்றை வைத்து நமது தலையில் இருக்கும் பொடுகை எளிதில் விரட்டலாம். ஒரு கப் தயிருடன் 5 டீஸ்பூன் வெந்தயத்தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலவையாக கலந்து கொள்ளவும்.
இதனை தலை முடியில் நன்கு மசாஜ் செய்வது போல் தேய்த்து அரை மணி நேரம் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டுக் குளிக்கவும். இதுபோன்ற வாரத்திற்கு இரண்டு முறை செய்தாலே தலையிலிருந்து பொடுகு தொல்லை காணாமல் போய்விடும்.
மேலும் தயிருடன் செம்பருத்தி இதழ், வேப்பிலை, ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து கலவையாக செய்து பயன்படுத்துவதன் மூலம் உங்கள் தலைமுடியை கருப்பாகவும் பளபளப்பாகவும் மாற்ற முடியும்.