25.3 C
Chennai
Sunday, Mar 15, 2026
TRYTUT
முகப் பராமரிப்பு

முகச்சுருக்கம் ஏற்படாமல் சருமம் பாதுகாக்கப்படும். கேரட் பேசியல்…!

காய்கறிகளும் பழங்களும் சாப்பிடுவது ஆரோக்கியத்தை மட்டுமல்ல நம் அழகையும் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். காரட் சாப்பிடுவதால் நம் சருமத்தின் நிறம் பொன்போன்று ஜொலிக்கும்.

கேரட்டில் உள்ள சத்துக்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்பது நாம் அறிந்ததே. அதே போல் கேரட் சாப்பிடுவதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

கேரட்சாறுடன் பசலைக்கீரை சாறும் எலுமிச்சை சாறும் கலந்து குடிக்க மலச்சிக்கல் நீங்கும். கேரட்டை மென்று தின்ன வாய்நாற்றம் தீரும். கேரட் சூப் வயிற்றுப்போக்கை குணப்படுத்தும்.
HJG
கேரட் பேசியல்: இரண்டு கேரட்டினை எடுத்து நன்றாக கழுவி வேகவைக்கவும். அதனை மசித்து முகத்தில் அப்ளை செய்யவும். நன்றாக உலர வைத்து பின்னர் அதனை உரித்து எடுக்கவும். பின்னர் வெது வெதுப்பாக நீரில் பஞ்சினை நனைத்து முகத்திற்கு ஒத்தடம் கொடுக்கவும். வாரம் இருமுறை கேரட் மாஸ்க் போட முகம் பொன்னிறமாக ஜொலிக்கும்.

கேரட்டுடன் சர்க்கரை சேர்த்து கெட்டியாக அரைத்து அதை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வர முக சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இறந்த செல்கள் இருந்தால் உதிர்ந்து விடும். புதிய ஆரோக்கியமான செல்கள் உற்பத்தியாகும்.
TRYTUT
நச்சுக்கழிவுகள்: கேரட்டில் உள்ள பொட்டாடிசியம், வைட்டமின் எ போன்றவை உடலின் நச்சுக்கழிவுகளை வெளியேற்றுகிறது. இதனால் முகப்பரு, கரும்புள்ளி உள்ளிட்ட சரும நோய்கள் ஏற்படுவதில்லை.

தினசரி கேரட் ஜூஸ் குடித்து வர கோடைகாலத்தில் ஏற்படும் சருமநோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். கோடையில் முகம் கருமையாவதை தடுக்கும். முகச்சுருக்கம் ஏற்படாமல் சருமம் பாதுகாக்கப்படும்.

Related posts

சூப்பர் டிப்ஸ்! முகப்பரு தழும்பை நிரந்தரமாக போக்க இந்த ஒரு பொருள் போதும்.!

nathan

உலகளவில் அழகுப்படுத்திக்க செய்யப்படும் விசித்திர சிகிச்சை முறைகள்!

nathan

ஆண்களே! இதோ சில அட்டகாசமான டிப்ஸ்… உங்க அழகை அதிகரிக்க வேண்டுமா?

nathan

வேனிட்டி பாக்ஸ்: பவுடர்

nathan

மூலிகை ஃபேஷியல்:

nathan

சிகப்பழகு பெற சூப்பர் டிப்ஸ்… ஒரு பேரிச்சம்பழம் போதும்..

nathan

பளீச் முகத்திற்கு இத மட்டும் யூஸ் பண்ணா போதும்!

nathan

ஸ்கின் டானிக்

nathan

முகத்தில் உள்ள கருமை போகணுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan