28.8 C
Chennai
Sunday, Apr 27, 2025
485201410
முகப் பராமரிப்பு

பெண்களே அடர்த்தியான கண் இமைகள் பெற சில டிப்ஸ்

மஸ்காரா பயன்படுத்துங்கள்:
வெளியே டேட்டிங் அல்லது ஏதாவது பார்ட்டிக்கு செல்வதால் உடனடியாக தடிமனான கண் இமை ரோமங்களை பெற வேண்டுமா? அப்படியானால் நல்ல மஸ்காராவை பயன்படுத்த வேண்டும். பெண்கள் தங்களின் கண் இமை ரோமங்களை தடியாக காட்ட பயன்படுத்தும் அழகு டிப்ஸ்களில் ஒன்றாக விளங்குகிறது மஸ்காரா. திறம்பட செயலாற்றும் இது புகழ்பெற்ற வழிமுறையாக விளங்குகிறது. நீளமான மற்றும் குட்டையான கண் இமை ரோமங்கள் என இரண்டு வகைகளுக்கும் பல வகையான மஸ்காராக்கள் கிடைக்கிறது. மேலும் அது பல வண்ணத்திலும் கிடைக்கிறது. ஆகவே கண் இமை ரோமங்களை உடனடியாக தடிமனாக்கி, அது நீண்ட நேரம் நிலைத்து நிற்க மஸ்காராவை பயன்படுத்துங்கள்.

செயற்கை இமை ரோமங்கள்:
கண்களுக்கு கொஞ்சம் நீட்சியை பயன்படுத்தலாம்; அது தான் செயற்கை இமை ரோமங்கள். இவைகள் பார்ப்பதற்கு செயற்கையானது தான் என்பதை சுலபமாக கண்டுபிடித்து விடலாம். ஆனால் நீண்ட தடிமனான கண் இமை ரோமங்களின் மீது அதீத காதல் கொண்டிருந்தால் இதனை நீங்கள் பயன்படுத்தலாம். கண் இமை ரோமங்களை உடனடியாக தடியாக்க இதுவும் சிறந்த வழியாக விளங்குகிறது. இந்த செயற்கை இமை ரோமங்கள் அனைத்து அழகு சாதன கடைகளில் கிடைக்கும். மேலும் பல வகைகளிலும் கிடைக்கும். பெண்கள் பரவலாக பயன்படுத்தும் முறை இது.

மாய்ஸ்சுரைஸ்:
கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களை ஈரப்பதத்துடன் வைக்க வாஸ்லின் பயன்படுத்துங்கள். இதனால் அவைகள் இயற்கையாகவே தடிமனாகவும், கருமையாகவும் காட்சி அளிக்கும். ஆனால் மேக் அப் செய்து கண் இமை ரோமங்களை தடிமனாக்குவதை விட, இது அதிக காலம் எடுக்கும். ஆனால் இது நிரந்தர தீர்வாக அமைந்து, உங்கள் கண் இமை ரோமங்களை தடியாக்கும்.

எண்ணெய்கள்:
ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற பல எண்ணெய்களை பயன்படுத்தி கண் இமை ரோமன்களுக்கு மசாஜ் செய்து கொள்ளலாம். இந்த எண்ணெய்கள் உங்கள் கண் இமை ரோமங்களில் உள்ள மயிரடி நரம்பிழைகளை தூண்டி விடும் இந்த எண்ணெய்கள். அதனால் அதன் வளர்ச்சி மேம்படும். அதே போல் இந்த எண்ணெய்களை கொண்டு உங்கள் கண் இமைகளையும் சீரான முறையில் மசாஜ் செய்ய வேண்டும். உங்கள் கண் இமை ரோமங்களின் வேராக விளங்குவது உங்கள் கண் இமைகளே. அதனால் கண் இமை ரோமங்களின் வளர்ச்சி தானாகவே மேம்படும். கண் இமை ரோமங்களை தடியாக்க இதுவும் ஒரு இயற்கையான வழிமுறையாகும். இந்த வழிமுறை செயல்பட நீண்ட காலமாகும். அதனால் உங்களுக்கு பொறுமை தேவைப்படும்

Related posts

முக அழகை அதிகரிக்கும் மஞ்சள் ஃபேஸ் பேக்

nathan

எப்படி நமது முகத்தில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை குறைப்பது!…

sangika

தெரிஞ்சிக்கங்க…முகப்பருவை குணப்படுத்த தேங்காய் எண்ணெய் தடவுவது சரியா?

nathan

சன்னி லியோன் கவர்ச்சியாகவும், அழகாகவும் இருப்பதன் ரகசியம் இதாங்க…

nathan

தெரிந்துகொள்ளுங்கள்! லிப்ஸ்டிக்கை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் என்ன?

nathan

உங்கள் சருமம் வறண்டிருக்கா? இதோ பொலிவை தரும் ஓட்ஸ் ரெசிபிகள்!!

nathan

எப்போதும் முகம் ப்ரெஷாக இருக்க சூப்பர் டிப்ஸ்…

nathan

கொரிய பெண்களின் கொள்ளை கொள்ளும் அழகின் ரகசியத்திற்கு ‘இது’ தான் காரணமாம்…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…எந்த சருமமாக இருந்தாலும் பயன்தரும் எளிய அழகு குறிப்புகள் !!

nathan