தேவையான பொருட்கள் :
சிக்கன் – 1/2 கிலோ
காலிஃப்ளவர் – பாதி
முருங்கைக்காய் – 2
வெங்காயம் – 200கிராம்
தக்காளி – 200 கிராம்
இஞ்சி பூண்டு – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
தனியா தூள் – 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
மிளகு தூள் – 2 ஸ்பூன்
சோம்பு, பட்டை, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பிரிஞ்சி இலை
எண்ணெய் உப்பு
செய்முறை :
* கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி தக்காளியை சேர்த்து தொக்கு பதம் வரும் வரை வதக்கவும்.
* தனியா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு சிறிது தண்ணீர் சேர்ககவும்.
* முருங்கைக்காய், காலிஃப்ளவர் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
* காய்கறிகள் வெந்தவுடன் சிக்கனை போட்டு நன்கு வேகும் வரை வதக்கவும்.
* சிக்கன் வெந்தவுடன் கொத்தமல்லி , கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.