வெளியூரில் பணியாற்றும் நேரத்தில், பல விதமான உணவுகளை மறந்து நாம் வாழ்ந்து வருகிறோம். மறந்த உணவில் பலாப்பழத்தின் மருத்துவ குணங்களை பற்றி காண்போம்.
பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் இரும்புசத்து, பொட்டாசியம், கால்சியம், புரதம் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளது. மேலும், மாவுசத்து மற்றும் நார்சத்துக்களும் அதிகளவில் உள்ளது.
இதுமட்டுமல்லாது பலாப்பழத்தில் சபோனின், ஐசோபிளாவின் மற்றும் லெக்கினேஸ் போன்ற தாவர ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.
இதன் மூலமாக பலாப்பழமானது ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல்பட்டு உடல் நலத்தை பாதுகாக்கிறது. மேலும், இவை எலும்பு வளர்ச்சிக்கு உதவும் காரணமாக உடல் வெகு சீக்கிரமாகவே வளர்ச்சியடைகிறது.
இதன் காரணமாக பலாப்பழத்தில் இருக்கும் ஐக்சுலின் என்ற சத்தானது, உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. மேலும், பலாப்பழத்தில் சுமார் 60 விழுக்காடு அளவிற்க்கான நீரில் கரைய முடியாத நார்ச்சத்தானது உள்ளது.
மேலும், நீரில் கடைய கூடிய பெக்டின் என்ற நார்சத்து மூலமாக இரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பானது குறைக்கப்பட்டு, உயர் இரத்த அழுத்தமானது சீராக்கப்படுகிறது. பலாப்பழத்தின் பிஞ்சிற்கு பித்தத்தை நீக்கும் சக்தியானது உள்ளது.
பலாப்பழத்தின் ஆண்மையை அதிகரிக்கும் சக்தியும்., தாய்ப்பாலை அதிகரிக்கும் சக்தியும் உள்ளது.