தேவையான பொருட்கள் :துத்திக் கீரை – 100 கிராம்
தக்காளி – 2
சின்ன வெங்காயம்- 10
பூண்டு – 5 பல்
மிளகு – அரை தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை :
• துத்திக் கீரை, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• ஒரு வாணலியில் சிறிது நெய்விட்டு, அரிந்து வைத்துள்ள தக்காளி, வெங்காயம், பூண்டு, துத்திக் கீரை மற்றும் அரை லிட்டர் நீர் கலந்து ஐந்து நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்கவும்.
• மிளகு, சீரகத்தை பொடி செய்து நெய்யில் தாளித்து கலந்து, உப்பு கலந்து சிறிது நேரம் கொதிக்க வைத்து பரிமாறவும்.
• இந்த சூப் 100 மி.லி. சாப்பிட உடல் சூடு குறைவும். உடல் வன்மை உண்டாகும். மூலச்சூடு குறைவும். மூலத்தில் ஏற்பட்டுள்ள வலியும் நீங்கும். மலச்சிக்கல் தீரும்.