மனச்சிதைவு நோய் என்பது தீவிர மனநோய்களில் ஒன்றாகும். உலகில் 2.6 கோடி மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. பொது வாக நூற்றில் ஒருவர் இந்நோயால் பாதிக்க படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் மே 24ந்தேதி உலக மனச்சிதைவு நோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
மனச்சிதைவு நோய் ஏற்பட இதுதான் கரணம் என்று உறுதியாக எதையும் கூறமுடி யாத நிலையில் இருக்கிறோம். எனினும் மூளையில் ஏற்படும் பாதிப்புகள், ரசாயன மாற்றங்கள் காரணமாக அமையலாம். இதன் காரணங்கள் உடலியல், உளவியல், சமூகவியல் என மூன்று பெருவகையாக பிரிக்கலாம். படிப்பில், வேலையில் கவனமும், திறமை குறைதல், இரவில் சரிவர தூக்க மின்மை, பசியின்மை, அடிக்கடி காரணமில்லாமல் கூட கோபம், எரிச்சல் வருதல், மற்றவர் களிடமிருந்து விலகி தனிமையை விரும்புதல், நடத்தையில் மாறுபாடு ஆகியவை மனச்சிதைவு நோயின் ஆரம்பகால அறிகுறிகள் ஆகும்.
நோயால் தாக்கப்பட்டவரின் நடவடிக்கைகள் முந்தய இயல்பிலிருந்து வித்தி யாச மாகவும் மாறியிருக்கும். தன்னை சுற்றி நடப்பவை பற்றியும், தன் நோய் பற்றிய உணர்வும் இருக்காது. இவர்கள் தேவையில்லாமலும், தேவைக்கதிகமாகவும், தொடர் பில்லாமலும் பேசுவார்கள். இவர்களது பேச்சு நமக்கு சரிவர புரியாது. இதிலிருந்து இவர் களின் சிந்தனையில் கோளாறு இருப்பது நமக்கு தெரிய வரும். தேவைக்கதிகமாக அல்லது பொருத்தமற்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தலாம். சில சமயம் எந்தவித உணர்ச்சியும் வெளிப்படுத்தாமல் இருக்கலாம். யாருமே அருகில் இல்லாத போதும் யாரோ பேசுகின்ற குரல் கேட்பதாக கூறுவர். அதே போல் மற்ற வர்களின் கண்ணுக்கு தெரியாத உருவங்கள் தெரிவதாக கூறலாம்.

அந்த சமயங் களில் இவர்கள் ஏதாவது பதில் சொல்லும் போது தனக்கு தானே பேசுவது போல தோன்றும். இந்த புலன் மாறாட்டம் மனச்சிதைவு நோயின் முக்கிய மான மாறுதல் ஆகும். கற்பனை எண்ணங்கள் மூலம் தன்னை சுற்றி இருப்பவர்கள் தனக்கு எதிராக சதி செய்ய திட்டமிடுவதாக சந்தேகப்படுவர். நோயின் அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனே மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று அந்த நபரை மனநல சோதனைக்கு உட்படுத்த வேண்டும். மன நோய் இருப்பது உறுதி படுத்தப்பட்டால் அவருக்கு தகுந்த சிகிச்சைகளை கண்டிப் பாக அளிக்க வேண்டும். மனச்சிதைவு நோயால் ஏற்படும் மாறுதல்களையும், அறி குறிகளையும் கட்டுப்படுத்த மாத்திரைகள் உள்ளன. இம்மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும். மருத்துவரின் உரிய ஆலோசனைகள் இல்லாமல் மருந்து சாப் பிடுவதை எக்காரணத்தை கொண்டும் நிறுத்தக்கூடாது. இம்மாத்திரைகள் நோயா ளிகளுக்கு மீண்டும் நோய் வராமல் காக்கின்றன. நோயால் பாதிக்கப்பட்டவரின் சிந்தனை, தொடர்பு முறைகளில் மாற்றம் ஏற்பட்டு ள்ளதால் அவருடையோ படிப்போ, பயிற்சியோ, வேலையோ பாதிக்கப் பட்டிருக் கும். எனவே அவர்களுக்கு உளவியல் சிகிச்சை, தொடர்பு முறை பயிற்சி அளிக்க வேண்டும். இப்பயிற்சிகளின் நோக்கம் நோயால் பாதிக்கப்பட்டவர் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்புவதாகும்.
இது குறித்து சமூக ஆர்வலரும், மனச்சிதைவு நோய்க்குட்பட்டவர்களை அரவணை த்து வருபருமான செளந்திரராஜன் என்பவர் கூறுகையில், மனநல சிகிச்சையில் மறுவாழ்வு ஒரு முக்கிய பகுதியாகும். இயல்பு நிலை யிலிருந்து மாறிய நபரை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்து சமூகத்திலும், குடும்பத் திலும் இயங்க வழி வகுப்பதே மறுவாழ்வு ஆகும். மறு வாழ்வு திட்டம் ஆலோ சனை, சமூகத்திறன் பயிற்சி, வேலைத்திறன் பயிற்சி, தொழிற்பயிச்சி, தொடர்புத் திறன் பயிற்சி ஆகியவற்றை கொண்டதாக அமைய வேண்டும். எனினும் மீண்டும் நோய் தாக்காமல் இருக்க மருந்தும், மறுவாழ்வும் அவசியம் தேவையாகும். சிலருக்கு முற்றிலும் நோயை குணப்படுத்த முடியாவிட்டாலும் கூட அவர்களையும் சமுதாயத்தில் சக மனிதர்களாக நடமாட வைப்பது தான் மறு வாழ்வு திட்டங் களின் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும். எனவே மனநலம் இன்றி உடல் நலம் இல்லை. உடல் நலத்தை பராமரிப்பதை போல் மனநலத்தையும் நாம் ஒவ்வொருவரும் சரியாக பராமரிக்க வேண்டும்.
தினகரன்