சமீபத்திய ஆய்வில் கர்ப்பத்திற்கு முன்பு எடை அதிகமாக இருந்த தாய்மார்கள் பிரசவத்திற்குப் பிறகும் எடை அதிகரிக்கவே செய்கிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
அதில் 20% சதவீதம் தாய்மார்கள் குறைந்தது இரண்டு கிலோ முதல் 4.5 கிலோ வரை எடை அதிகரித்து காணப்படுகிறார்கள். இதற்கு கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களும் காரணமாகும்.
# கர்ப்ப காலத்தில் ஏற்படும் மாற்றங்கள்:
* கர்ப்ப காலத்தில் வயிறு பெரிதாவதால், வயிற்றுப் பகுதி சருமத்தில் கோடுகள் ஏற்படும்.
முகம், கழுத்து, வயிற்றுப் பகுதிகளில் கரும்புள்ளிகள் உருவாகும்.
* வயிறு, இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் கொழுப்பு சேர ஆரம்பிக்கும்.
* கர்ப்ப காலத்தில் அனைத்து உறுப்புகளுக்கும் செல்லும் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும். இதயம் வேகமாக துடிக்கும்.
* மார்பகங்கள் பெரிதாகும். கர்ப்பப்பை விரிவடையும்.
# உடல் எடை அதிகரிக்க காரணங்கள்:
* தாய்மார்கள் பால் ஊட்டுவதால் இயல்பை விட அதிக அளவு உணவு உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால் உடல் எடை அதிகரிக்கலாம்.
* பலசமயம் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகும், அதிக அளவு கலோரிகள் தொடர்ந்து உட்கொள்வதாலும், அதிக உடல் பருமன் ஏற்படலாம்.
* பொதுவாக பிரசவத்திற்குப் பிறகு கூடுதல் பொறுப்புகளினால் ஹார்மோன்களால் உடல் எடை அதிகரிக்கிறது.
* முழு நேர ஓய்வில் இருப்பதாலும் உடல் எடை அதிகரிக்கிறது.
* உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையை பின்பற்றுவதாலும் உடல் எடை அதிகரிக்கிறது.