29.5 C
Chennai
Friday, Mar 13, 2026
210701158685837513ec36ddf41b3bec27afff5ba
ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ் அதிக பயன்களை கொண்ட திப்பிலி எதற்கு பயன்படுகிறது தெரியுமா….?

திப்பிலிப்பொடி, கடுக்காய்ப் பொடி சம அளவு எடுத்து தேன்விட்டு குழைத்து 1/2 டீஸ்பூன் அளவு காலை, மாலை என இருவேளை உண்டுவந்தால் இளைப்பு நோய்நீங்கும். திப்பிலிப் பொடியை பசுவின் பாலில் விட்டு காய்ச்சி அருந்தி வந்தால் இருமல், வாய்வுத் தொல்லை, மூர்ச்சை, முப்பிணி நீங்கும்.

திப்பிலியை பொடியாக்கி 1:2 விகிதம் வெல்லம் கலந்து உட்கொள்ள விந்து பெருகும். நெய்யுடன் கலந்து சாப்பிட ஆண்மை பெருகும். திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் எடுத்து தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், தொண்டைக் கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு குணமாகும். இரைப்பை, ஈரல் வலுப்பெறும். திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு சம அளவாக எடுத்து வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் குணமாகும்.

210701158685837513ec36ddf41b3bec27afff5ba

திப்பிலியை இடித்துப் பொடியாக்கி 1 தேக்கரண்டியளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், கபம், வாய்வு நீங்கும். செரிமானம் அதிகரிக்கும். திப்பிலி 50 கிராம், கரிசலாங்கண்ணி இலை 25 கிராம், 1/2 லிட்டர் நீரில் போட்டு நீரைச் சுண்டக் காய்ச்சிய பின் நிற்கும் திப்பிலியையும் தழையையும் இள வறுப்பாய் வறுத்துப் பொடித்த எடைக்குச் சமமாகப் பொரிப்பொடி சேர்த்து அதே அளவு சர்க்கரை கூட்டி 5 கிராம் அளவு 2 வேளை தொடர்ந்து சாப்பிட்டுவர இருமல், களைப்பு நீங்கும். திப்பிலி 10 கிராம், தேற்றான் விதை 5 கிராம் சேர்த்துப் பொடியாக்கி கழுநீரில் 5 கிராம் எடை அளவைப் போட்டு 7 நாள் காலையில் குடித்துவர வெள்ளை, பெரும்பாடு நீங்கும். திப்பிலிப் பொடி, கடுக்காய்ப் பொடி சம அளவாக எடுத்துத் தேன் விட்டுப் பிசைந்து இலந்தைப் பழ அளவு இருவேளை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டு வர இளைப்பு நோய் குணமாகும்.

Related posts

நாம் தினமும் ஒரு பச்சை வெங்காயத்தை சாப்பிடுவது கோடைகாலத்தில் நம்மை உற்சாகப்படுத்தப்படுகிறது. ஏனெனில் இது உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும் மற்றும் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.

nathan

சுவையான மட்டன் கீமா கட்லெட்

nathan

உணவே மருந்து !!!

nathan

வெயிலுக்கு குளுமை தரும் ஃப்ரூட்ஸ் சாட்

nathan

சூப்பரான புத்துணர்ச்சியூட்டும் மசாலா டீ

nathan

மூன்று வேளையும் சோறு சாப்பிடுபவரா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமளிக்கும் தமிழர்களின் 6 பானங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா ஏன் குளிர்காலத்தில் அவசியம் கமலா ஆரஞ்சு சாப்பிடணும் தெரியுமா?

nathan

12 நாட்கள் வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட்டு நம்ப முடியாத வகையில் மாறிய அதிசய பெண்!

nathan