25.8 C
Chennai
Sunday, Nov 24, 2024
bath
ஆரோக்கியம்

கோடை காலத்தில் இவ்வாறு குளிக்கவேண்டும்!…

கோடை காலத்தில் மட்டுமல்ல அனைத்து பருவ காலங்களிலும் குளித்தல் என்பது மிகவும் அவசியமான ஒன்று, நம்மில் பலர் குளியலை உடம்புக்கு குளித்தல், தலைக்கு குளித்தல் என இரு வகையாக பிரித்துள்ளனர். உண்மையில் குளியல் என்றாலே, தலைக்கு குளிப்பதுதான்.

தூங்கி எழுந்தவுடன் அதிலும் சூரிய உதயத்திற்கு முன் குளிப்பதனால் இரவு ஏற்படும் உடல் சூடு முற்றிலுமாக குறைந்து, நல்ல புத்துணர்ச்சியும், ஆற்ற‌லும் பெருகும். கோடைக்காலங்களில் கண்டிப்பாக காலை மாலை என இரண்டு வேளைகள் குளிக்க வேண்டும்.

மேலும், இரவில் குளிப்பதனால் நல்ல தூக்கத்தை பெருவதுடன் மன அழுத்தமும் குறைகிறது.குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளவேண்டிய இந்த எண்ணெய் குளியல் குறித்து தற்போது நாம் காண்போம்.

கோடை காலத்தில் எவ்வாறான குளியல் முறையை பின்பற்ற வேண்டும் என பார்க்கலாம்;

bath

நல்லெண்ணெய் குளியல் :

வாரத்திற்கு இரண்டு முறையாவது நல்லெண்ணை என சொல்லப்படும், எள்ளு எண்ணெயை உடல் மற்றும் தலை முழுவதும் தேய்த்து குளிக்க வேண்டும்.

கோடை வெப்பத்தால் ஏற்படும் வேனல் கட்டிகள், வியர்க்குரு போன்றவைகளை, இந்த எண்ணெய் குளியல் சரி செய்கிறது.

உடலை குளிர்ச்சியடைய செய்வதுடனும், சருமத்தில் உள்ள பிரச்னைகளை போக்கி நல்ல முடி வளர்ச்சிக்கு நல்லெண்ணைக் குளியல்வழிவகை செய்கிறது.

நல்லஎண்ணெய் குளியலுக்கென சில தினங்களை நம் முன்னோர்கள் கடைபிடித்துள்ளனர்.

அதன்படி,பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் எண்ணெய் குளியல் மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல் ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் குளியல் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளனர்..

நல்லெண்ணெய் குளியலின் மூலம் மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதுடன், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளியேறிவிடும்.

உடலுக்கும் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால், சருமம் பொலிவோடு, மென்மையாக இருக்கும்.

வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொள்வதனால்,பொடுகுத் தொல்லை நீங்கும்.

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபட முடியும்.

வேலைப்பளுவின் காரணமாக கண்கள் சார்ந்த பிரச்னைகளுக்கு நாம் ஆளாக நேரிடும் ,. எனவே அத்தகைய தொந்தரவுகள் சரியாக வாரம் ஒருமுறை நல்லெண்ணெக்குளியல் மேற்கொள்ள வேண்டும்.

குளியல் நல்லெண்ணெய் தயாரிக்கும் முறை:

நல்லெண்ணெய் – 1 கோப்பை
வர மிளகாய் – 1
பூண்டு – 3பல்
வெந்தயம் – 1/2 தே.க
மிளகு – 1/2 தே.க

நல்லெண்ணெயை சூடாக்கி அதில், வர‌மிளகாயை போடவும். பின்னர், வெந்தயம்,பூண்டு,மிளகாய் போன்றவற்றை அடுத்தடுத்து போட்டு ஒரு நிமிடம் கழித்து இறக்கி விடவும்.

பின்னர், வெதுவெதுப்பான சூட்டில் உடல் மற்றும் தலை முழுவதும் நல்லெண்ணெயை, அழுத்தி தேய்த்து மஸாஜ் செய்யவும்.

இவ்வாறு எண்ணெயை காய்ச்சி தேய்ப்பதனால், சளி, தும்மல் பிரச்னை, தலையில் நீர் கோர்த்தல், தலை பாரம், தலை வரட்சி இருக்காது.

மேலும் இந்த நல்ல எண்ணெய் குளியலால் உடல் சூடு தணிந்து, தோல் வரட்சி நீங்கி உடல் மினுமினுப்பாக காணப்படும்.

எண்ணெய் குளியலின் போது கண்டிப்பாக வெதுவெதுபான நீரில் தான் குளிக்க வேண்டும்.

அப்பொழுது தான் உடலில் உள்ளஎண்ணெய் பிசுக்கு போகும், மேலும் உடல் மிக அதிக குளிர்ச்சி ஆகமல் தடுக்க முடியும்.

எண்ணெய் குளியலின் போது எதை பயன்படுத்த வேண்டும்;

எண்ணெய் குளியல் எடுத்துக்கொள்ளும் நேரங்களில், ஷாம்பு போன்ற கெமிக்கல் கலந்தவற்றை தேய்க்க கூடாது, மாறாக உடலுக்கு பாசிப்பயிற் மாவு, நலங்கு பொடி போன்ற மூலிகை பொடிகளை பயன்படுத்துவது சிறந்த நன்மைகளை தரும். அதேபோல, தலைக்கு அரப்பு, சீகக்காய் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.

சீகக்காய் தயாரிப்பது எப்படி?

சீயக்காய்- 1 கிலோ
செம்பருத்திப்பூ- 50
பூலாங்கிழங்கு – 100 கிராம்

காய்ந்த‌எலுமிச்சை தோல் – 25

பாசிப்பருப்பு – 1/4 கிலோ

காய்ந்த நெல்லி – 100 கிராம்

கார்போக அரிசி – 100 கிராம்

மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும், எண்ணெய் குளியலின் போது வெறும் தண்ணீர் மட்டும் கலந்து தலைக்கு தடவி அலசலாம் அல்லது சாதம் வடித்த கஞ்சியில் போட்டு கலந்து தேய்க்கலாம்.

இதனால் முடி நல்ல வளர்ச்சியடைவதுடன், இளநரையை போக்கும். மேலும், பொடுகு, அரிப்பு போன்ற தலை முடி பிரச்னைகளை போக்கும் தன்மைகொண்டது சீயக்காய்.

Related posts

வாழ்க்கை ரகசியங்கள் என்னென்ன என்று தெரியுமா உங்களுக்கு? அப்போ இத படியுங்கள்!…

sangika

கோடை காலங்களில் பிரசவம் ஆன தாய்மார்கள் கவனிக்க வேண்டியது :

sangika

பிள்ளைகளின் தேர்வு பயத்திற்கான காரணம் பற்றி தெரிந்து கொள்ள ஆசையா?

sangika

தொடர்ந்து பாகற்காய் சாறு சாப்பிட்டு வந்தால் இத்தனை நன்மைகளா?

sangika

விதைகளைப் பாதுகாப்பது என்பது உயிர்களை பாதுகாப்பதற்கான ஒரு முன் கூட்டிய நடவடிக்கை

sangika

கருவுருதலுக்கு இடையூறு அளிக்கும் காரணி…..

sangika

காலையில் எழுந்ததும் திடீரென்று தலைவலி அல்லது தலைச்சுற்றல் ஏற்படுகிறதா? அப்போ கட்டாயம் இத படிங்க!

sangika

இந்த உடற்பயிற்சி உத்திகளை பின்பற்றி கொழுப்பை குறைக்கலாம்…..

sangika

இதுவும் நம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்தாம்.. வைட்டமின் F பற்றி கேள்விபட்டதுண்டா?

nathan