25.8 C
Chennai
Sunday, Nov 24, 2024
hair2
தலைமுடி சிகிச்சை

தலை முடி மெல்லியதாகவும் சோர்வானதாகவும் இருப்பதற்கு பல காரணங்கள்….

முடியின் ஆயுட்காலம் முழுக்க, அது பலவிதமான பொருட்களை எதிர்கொள்கிறது. வெப்பம், முடியில் வண்ணம் தீட்டுதல், கடுமையான பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் போன்றவை அதில் அடங்கும். இதில், பல பொருட்கள், உங்களுக்கே தெரியாமல், உங்கள் தலைமுடியின் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக இருக்கும்.

உங்கள் தலை முடி மெல்லியதாகவும் சோர்வானதாகவும் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம்; அவற்றில் சில…

ஒவ்வொரு முறையும் நீங்கள் கடுமையான சீப்புகளை பயன்படுத்தும்போது, தலைமுடியில் உள்ள இயற்கையான எண்ணெய் பதத்தை அகற்றிவிடுகிறீர்கள்.

முடியில் இருக்கும் இயற்கை எண்ணெய், முடியை பளபளப்பாக வைக்க உதவுவது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலில் இருந்து காக்கிறது.

நிறைய ஷாம்பூ மற்றும் கண்டிசனர்களில் இருக்கும் பாராபின் மற்றும் சாயம், நீண்ட மற்றும் குறுகியகால பாதிப்புகளை ஏற்படுத்தி தலைமுடியை சோர்வாகவும் வறண்ட தன்மை கொண்டதாகவும் வைக்கிறது.

இதுதான் சோர்வான மற்றும் மெல்லிய முடிக்கான பரவலான காரணமாக இருக்கிறது.

hair2

டிப்ஸ்: மிகவும் பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட்ட ஷாம்பூவை தேர்ந்தெடுங்கள்.

பாராபின், தலைமுடியை மிகவும் வறட்சியாக மாற்றுவதால், பாராபின் இல்லாத ஷாம்பூவை தேர்ந்தெடுங்கள். ஒரு நல்ல ஷாம்பூ, முடியில் உள்ள இயற்கையான எண்ணெய்யை அகற்றாது.

தலைமுடி சோர்வாகவும் உயிரற்ற தன்மையுடனும் இருப்பதற்கு தட்பவெப்பமும் ஒரு காரணமாக இருக்கிறது.

வெயில் காலத்தில், அதிக நேரம் வெளியே இருப்பது, தலைமுடியை மிகவும் வறட்சியாக மாற்றும். குளிர்காலத்தில், காற்றில் இருக்கும் ஈரத்தன்மையே, தலைமுடியை வறட்சியாக்கும்.

டிப்ஸ்: வாரத்திற்கு ஒருமுறை தலையில் எண்ணெய் தேயுங்கள். ஒவ்வொரு முறை தலைக்கு குளித்தபின்னர், கண்டிஷனர் உபயோகப்படுத்துங்கள்.

தடிமனான மற்றும் நீர்த்தன்மை அதிகம் நிறைந்த கண்டிஷனரை பயன்படுத்துவது சிறந்தது. சரியான மற்றும் மென்மையான பொருட்களை பயன்படுத்துவதை மறந்துவிடாதீர்கள்.

அதிகப்படியான பொருட்களை பயன்படுத்துவது, தலைமுடியை சோர்வாகவும் எடை குறைவானதாகவும் மாற்றுகிறது.

தலையில், அதிக பொருட்களை பயன்படுத்துவது, சில சமயம் அடுக்கடுக்காக சேர்ந்துவிடுகிறது. சரியாக கழுவவில்லை எனில், ஷாம்பூ மற்றும் கண்டிஷனரும் கூட இதில் அடங்கும்.

டிப்ஸ்: வேர் மற்றும் முடியை சுத்தப்படுத்த, எப்போவாவது ஒருமுறை, டீ டாக்ஸ் ஷாம்பூவை பயன்படுத்துவது நல்லது.

அடிக்கடி தலைமுடியை கழுவவேண்டாம். தினமும் தலைக்கு குளிப்பது சோர்வான முடிக்கு காரணமாக இருக்கும்.

3 நாட்களுக்கு ஒருமுறை தலைக்கு குளிப்பதை முயற்சி செய்து பாருங்கள். தலைமுடி, இதற்கு பழக்கப்பட சில காலம் ஆகும். ஆனால், நீண்டகால பிரச்சனைக்கு பதில், இது சிறந்தது.

டிப்ஸ்: தினமும் தலைக்கு குளிக்கவேண்டுமென்றால், பாரபின் மற்றும் சாயம் கலக்காத ஷாம்பூவை பயன்படுத்த தொடங்குங்கள்.

உங்கள் தலைமுடியயின் தோற்றத்தை அடிக்கடி மாற்றுகிறீர்களானால், சூடுபடுத்தும் கருவிகள் பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும்.

சூடுபடுத்துவது, தலைமுடியை சோர்வாகவும், விரைவாக உடைந்துவிடும் தன்மையுடனும், சேதமடைந்துவிடுவதாகவும் மாற்றிவிடும்.

டிப்ஸ்: எப்போது முடியுமோ, அப்போதெல்லாம் தலைமுடிக்கான மாஸ்க் மற்றும் எண்ணெய் தடவி தலைமுடியில் ஏற்பட்டுள்ள சேதத்தை சரிபடுத்தலாம்.

குறைந்த வெப்பத்தில், தலைமுடியின் தோற்றத்தை மாற்றுவது நல்லது. மேலும், தலைமுடி சேதமாவதை தடுக்க, வெப்பத்தை கட்டுப்படுத்தும் பொருட்களை உபயோகப்படுத்துவது நல்லது.

தலைமுடி ஈரமாக இருக்கும்போது சீவுவதோ அல்லது தோற்றத்தை மாற்றுவதோ தலைமுடியை மிகவும் சேதமாக்கும். தலைமுடி ஈரமாக இருக்கும்போது மிகவும் எளிதாக உடைந்துவிடும்.

டிப்ஸ்: அதிக ஈரம் இல்லாத தலைமுடியில், சீரம் அல்லது எண்ணெய்யை பயன்படுத்தி அகலமான பற்கள் கொண்ட சீப்பை வைத்து தலை வாறலாம்.

நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதற்கும் நம் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு இருக்கிறது.

நீங்கள் நல்ல மற்றும் சீரான உணவுமுறைகளை பின்பற்றாவிட்டால், தலைமுடி சோர்வாகவும் புத்துணர்ச்சி இல்லாமலும் இருக்கும்.

இவைதான், தலைமுடி சோர்வாகவும் மெல்லியதாகவும் இருப்பதற்கான காரணங்களாக இருக்கிறது.

இந்த வழிகாட்டுதல்கள், உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க உதவும் என நம்புகிறோம்.

Related posts

முடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள்

nathan

வெயில் காலத்தில் வரும் பொடுகு தொல்லையை போக்க வழிகள்

nathan

கருகரு கூந்தலுக்கு கறிவேப்பிலை

nathan

உங்களுக்கு தெரியுமா இளநரையைப் போக்கி, கருகருவென முடி வளர்ச்சியைத் தரும் தும்மட்டி பழங்கள் !!

nathan

வீட்டியேயே இயற்கை ஷாம்பூ தயாரிப்பது எப்படி?

nathan

கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு

nathan

முடி கொட்டுவதை தடுத்து முடி வளர உதவ இந்த எண்ணெய்களை யூஸ் பண்ணுனா போதுமாம்!

nathan

உங்க தலைமுடி பலவீனமா இருக்கா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

கூந்தல் வளர்ச்சியை ஷாம்பு அதிகப்படுத்துமா?

nathan