34 C
Chennai
Wednesday, Aug 20, 2025
kasam
ஆரோக்கியம் குறிப்புகள்ஆரோக்கியம்

கர்ப்பமாக இருக்கும்போது காசநோய் ஏற்பட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

தற்போது கர்ப்ப காலத்திலோ அல்லது அதற்கு முன்னரோ ஒரு பெண்ணுக்கு காசநோய் இருப்பது தெரிய வந்து, பிறகு முறையான சிகிச்சையினைச் செய்துவிட்டால் அந்த தாய்க்கு அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது உறுதி.

கர்ப்ப காலமும், காசநோய் பிரச்சனையும்

தாய்மார்கள் கர்ப்பமாக இருக்கும்போது காசநோய் ஏற்பட்டால் அது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது.

மேலும், காசநோய் இருக்கும் பெண் கர்ப்பம் தரிப்பது சகஜமாக நிகழக்கூடியதே. இனப்பெருக்க உறுப்புகளில் காசநோயிருந்தால்தான் கர்ப்பம் தரிப்பது என்பது இயலாத காரியமாகும்.

மருத்துவம் முன்னேறாத காலத்தில் காசநோய் ஒரு பெண்ணுக்கு வந்துவிட்டால் அதைக் குறிக்க ஒரு சொல்வழக்கு இருந்திருக்கிறது. அது என்னவென்றால்,

‘‘கன்னி கழியாத கன்னிக்குக் காசமெனில் கல்யாணமில்லை. கல்யாணமானவளுக்கு கர்ப்பமில்லை, கர்ப்பமானவளுக்கு அடுத்த கர்ப்பமில்லை, தாயனவளுக்குத் தாய்ப்பாலூட்ட வழியில்லை’’ என்பதாம்.

இப்போது கர்ப்ப காலத்திலோ அல்லது அதற்கு முன்னரோ ஒரு பெண்ணுக்கு காசநோய் இருப்பது தெரிய வந்து, பிறகு முறையான சிகிச்சையினைச் செய்துவிட்டால் அந்த தாய்க்கு அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது உறுதி.

கர்ப்பப்பையின் காசநோயர்ல் காசநோய்க்கிருமிகள் ‘பனிக்குட நீர்’ எனும் ஆம்னியாடிக் திரவத்தில் கலந்து விடும்.

அவற்றை கருப்பையில் இருக்கும் குழந்தை விழுங்கிவிடும். அக்கிருமிகள் பச்சளம் குழந்தைக்கு காசநோயினை ஏற்படுத்திவிடும்.

பிறவிக் காசநோயின் அல்லது பச்சிளம் குழந்தை காசநோயின் அறிகுறிகள் என்ன?

பிறவிக் காச நோயால் மஞ்சள் காமாலை, இரத்த சோகை, குழந்தையின் வளர்ச்சி குறைவு, நீலம் பூத்து இருத்தல், பெருத்த மண்ணீரல், நுரையீரலில் காசத் தொற்று நோய் போன்றவை இருக்கும்.

kasam

பிறவிக் காச நோயின் நிர்ணயம்

இக்காச நோயினினி நிர்ணயிக்க இரைப்பை கழுவலில் காச நோய்க்கிருமியைத் தேடல், நுரையீரல் அல்லது கல்லீரல் பயாப்சி போன்ற சோதனைகள் தேவைப்படும்.

பச்சிளம் குழந்தையின் வாய் வழியாகவோ அல்லது மூக்கு வாயாகவோ மெல்லிய ரப்பர் அல்லது பிளாஸ்டிக் குழாயினைச் செலுத்தி பின்னர் வயிற்றிலிருந்து வரக்கூடிய நீரினை எடுத்து, அதில் காச நோய்க்கிருமிகள் இருக்கின்றனவா எனப் பரிசோதித்துப் பார்ப்பதையே ‘இரைப்பை கழுவலில் காசநோய்க்கிருமியைத் தேடல்’ என்போம்.

இவ்வளவு சித்திரவதையான சோதனைதான் பச்சிளம் குழந்தைக்கான காசநோயினை நிர்ணயிக்க உதவுமா? மற்ற பரிசோதனைகளான தோல் ஊசி பரிசோதனை போன்றவற்றால் நிர்ணயிக்க முடியாதா?

தோல் ஊசி பரிசோதனை பச்சிளம் குழந்தைகளுக்கும், வயது முதிர்ந்தோருக்கும் பயன்படாது.

பச்சிளம் குழந்தைக்குள்ள காசநோயினை உரியவாறு நிர்ணயம் செய்து சரியான மருத்துவம் செய்துவிட்டால் குழந்தையின் வாழ்வும் மலரும், குழந்தையும் பிழைத்துக்கொள்ளும்.

தாய்க்கும் காசநோய்க்கான கிசிச்சையினை முறையாக அளிப்பது மிக அவசியம்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பமாக இருந்தால் கத்திரிக்காயை சாப்பிடலாமா?

nathan

எது சரியான முறை? உடல் எடை குறைப்பு

nathan

உங்களுக்கு அழகான தொடையை பெற வேண்டுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பெண்களை சித்திரவதை செய்யும் சில உடல் நல குறைவுகள்…

sangika

முயன்று பாருங்கள் நரம்புச்சுருட்டலுக்கு மிகச்சிறந்த நிவாரணி

nathan

இதயத்துக்கு மது நண்பனா, பகைவனா?/DOES DRINKING IS GOOD TO HEART?

nathan

உடலுக்கு ஆரோக்கியமான ஹர்பல் டீ…!

sangika

எதிர்ப்பு சக்தி நிறைந்த முந்திரிபழம்!

nathan

அற்புதமான எளிய தீர்வு! உடலில் உள்ள கொழுப்பை வேகமாக கரைக்க உதவும் 7 வழிமுறைகள்!!!

nathan