32.6 C
Chennai
Friday, Jul 17, 2026
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா இவ்வளவு சத்துக்களை கொண்டதா நிலக்கடலை….!

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு. பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது.

இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் வராது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். பித்தப் பை கல்லைக் கரைக்கும்.

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்துநிறைந்துள்ளது . இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது.

இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது. நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளைவளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

Related posts

சுவையான சில்லி பிரட் உப்புமா

nathan

முட்டையை வேக வைக்காமல், பச்சையாகக் குடித்தால் உடலுக்கு நல்லதா?

nathan

சூப்பர் டிப்ஸ் செவ்வாழையில் இத்தனை நன்மைகளா?

nathan

பப்பாளி விதையுடன் கொஞ்சம் தேன் கலந்து சாப்பிட்டால் இத்தனை நன்மையா? தெரிஞ்சிக்கங்க…

nathan

கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:

nathan

நடக்கும் அதிசயம்!காலை எழுந்தவுடன் இந்த பொருளை சாப்பிட்டால் போதும் !

nathan

வைட்டமின் ஏ குறைபாடு உள்ள ஒரு நபர் அடிக்கடி நோய்த்தொற்றுகளை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகம்.. தவிர்க்க தினமும் என்ன செய்யணும் தெரியுமா?

nathan

சைவ உணவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா?…இந்த 7 நாள் உணவு அட்டவணையை பின்பற்றவும்…

nathan

உங்களுக்கு எலுமிச்சை சாற்று நீரை அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan