3 6658
ஆரோக்கிய உணவு

வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது நல்லதா…? எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

காலை உணவாக பழங்ளை சாப்பிடுவது மிகவும் நல்லது. பழங்களில் அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளதால், உடல் ஆரோக்கியம் மேம்படும். மேலும் அந்த சமயத்தில் செரிமான செயல்பாடு சீராக இயங்கும். பழங்களில் உள்ள அனைத்து சத்துக்களையும் உறிஞ்சு  எடுத்துக்கொள்ள உடல் ஒத்துழைக்கும்.
காலை உணவை சாப்பிடுவதற்கு முன்பாக அன்னாசி, முலாம் பழம், வாழை, திராட்சை, பெர்ரி, பேரிக்காய், மாங்காய், பப்பாளி, ஆப்பிள்  போன்ற பழங்களை சாப்பிடலாம்.

காலை வேளையில் பழங்களை சாப்பிடும் போது, உடலின் செயல்பாடுகள் அனைத்தும் சீராக இருக்கும். குறிப்பாக செரிமான மண்டலம்  ஆரோக்கியமாக செயல்படும்.
மதிய உணவு சாப்பிடுவதற்கு முன்பாக பழங்களை சாப்பிடுவது எடை குறைப்புக்கு வழிவகுக்கும். எளிதாக செரிமானம் நடைபெறவும் உதவி  புரியும். முலாம் பழம், அன்னாசி பழம், மாதுளை பழம், ஆப்பிள், மாம்பழம், பெர்ரி வகை பழங்களை அப்போது சாப்பிடலாம்.
பழங்களை காலை உணவாக உண்பதால், உடலுக்கு வேண்டிய ஆண்டி-ஆக்ஸிடன்ட் ஆதரவு முழுமையாக கிடைக்கும். காலை உணவாக ஜூஸ் குடிக்க நினைத்தால், பெர்ரி பழங்கள் மற்றும் திராட்சையுடன் தயிர் சேர்த்து அரைத்து, இனிப்பு சுவைக்கு தேன் சேர்த்து குடியுங்கள்.
எடையைக் குறைக்க டயட்டில் உள்ளவர்கள், காலையில் பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிலும் பெர்ரி பழங்கள் மற்றும்  வாழைப்பழங்களை சாப்பிடுவதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.
வேலைக்கு செல்வதற்கு முன்பும், வேலை முடிந்த பின்பும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அது சோர்வின்றி உடல் சுறுசுறுப்பாக  இயங்குவதற்கு பக்கபலமாக இருக்கும். நார்ச்சத்து நிறைந்த பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். உணவுடன் சேர்த்து பழங்களை  ஒருபோதும் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அப்படி செய்வது செரிமானத்தை தாமதப்படுத்திவிடும்.3 6658

Related posts

உடல் நலனை ஊக்குவிக்கும், நல்ல கொழுப்புச் சத்துள்ள உணவுகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் செய்யக்கூடாத 10 விஷயங்கள்!

nathan

எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் சாப்பிட வேண்டியவைகள் மற்றும் சாப்பிடக்கூடாதவைகள்!

nathan

செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடித்தால் செரிமான பிரச்சனைகள் நீங்குவதோடு, வயிற்று சம்பந்தமான பிரச்சனைகளையும் போக்குகிறது.

nathan

உங்களுக்கு தெரியுமா சர்க்கரை நோய் வராமல் இருக்க நம் முன்னோர்கள் பயன்படுத்தியது இதை தானாம்!

nathan

சூப்பரான சிலோன் ஸ்டைல் தேங்காய்ப்பால் சொதி: செய்முறை விளக்கம்

nathan

சூப்பர் டிப்ஸ் ! சளி, இருமல் தொல்லையா… இதமான மைசூர் ரசத்தை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!!!

nathan

karuveppilai benefits in tamil – கருவேப்பிலை பயன்கள்

nathan

is pomegranate good for pregnancy ? கர்ப்பத்திற்கு மாதுளை நல்லதா ?

nathan