1 1537255061
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா பழத்திலேயே முதன்மையானது என அகத்தியர் மருத்துவம் சொல்லும் பழம் இதுதான்…

பழத்திலேயே முதன்மையானது விளாம்பழம்தான் என அகத்தியர் சொல்லக் காரணம் என்ன தெரியுமா? விளாம்பழம் மிக மலிவாகக் கிடைக்கக்கூடிய ஆனால் அதீத மருத்துவ குணங்கள் கொண்ட பழங்களில் ஒன்று.

அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.இந்த பழத்தை தொடர்ந்து இருபத்தோரு நாட்கள் வரை சாப்பிட்டு வந்தால், வாதம், பித்தம் தொடர்புடைய அத்தனை நோய்களையும் தீர்க்கும் சக்தி கொண்டது. அதனுடைய மற்ற மருத்துவ குணங்கள் பற்றி இங்கே காண்போம்.

ஊட்டச்சத்துக்கள் விளாம்பழம் பல நோய்களைக் குணப்படுத்தும் சிறந்த பழம். அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக, விளாம்பழத்தில் அதிக அளவில் இரும்புச் சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இருக்கின்றன. வைட்டமின் ஏ அதிக அளவில் நிறைந்திருக்கின்றன.

பித்த வாந்தி தலைவலி, லேசாக கண்பார்வை மங்குவது போன்று இருத்தல், காலையில் எழுந்ததும் பித்தத்தால் மஞ்சள் நிறமாக வாந்தி எடுத்தல், வாய் கசப்பாகவே இருத்தல், பித்தத்தால் வரும் கிறுகிறுப்பு, உள்ளங்கை மற்றும் கால்களில் அதிகப்படியாக வியர்வை உண்டாதல், பித்தத்தால் வரும் இளநரை, நாக்கு மரத்துப் போதல் போன்ற பித்தத்தால் ஏற்படுகிற பிரச்னைகளுக்கு மிகச் சிறந்த தீர்வாக இந்த விளாம்பழம் இருக்கும்.

அஜீரணக் கோளாறு விளாம் பழத்துக்கு ரத்தத்தின் மூலம் கலக்கின்ற நோய்க் கிருமிகள் மற்றும் நோய் அணுக்களைச் சாகடிக்கின்ற திறன் உண்டு. எந்த நோய்க் கிருமிகளும் ரத்தத்தில் பரவாமல் தடுக்கும். அஜீரணக் கோளாறுகளை சரிசெய்து, பசியைத் துண்டவும் விளாம்பழம் உதவுகிறது.

நரம்பு பிரச்சினைகள் நரம்புத் தளர்ச்சி பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு விளாம்பழம் மிகச் சிறந்த தீர்வாக அமையும். அதேபோல், உடலில் ஏற்படும் கால்சியம் குறைபாடு, தலைமுடியில் உண்டாகும் அதிகப்படியான வறட்சி, சருமத்தில் உண்டாகும் அதிகப்படியான வறட்சி ஆகியவற்றுக்கும் மிகச்சிறந்த மருந்தாக விளாம்பழம் இருக்கும். நரம்புத் தளர்ச்சி பிரச்சினை உள்ளவர்களுக்கு விளாம்பழத்தினுடைய சதைகளை எடுத்து, அதில் பனை வெல்லத்தைக் கலந்து, இரவு முழுக்க பனியில் வைத்திருந்து, காலையில் அதை எடுத்து சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி பிரச்சினைகள் குணமடையும்.

மாதவிடாய் பிரச்சினைகள் பெண்களுக்கு ஏற்படுகின்ற மாதவிடாய் பிரச்சினைகள், அதிக உதிரப் போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பல பிரச்சினைகளுக்கும் விளாம்பழம் மீர்வாக இருக்கும். இந்த விளா மரத்தில் இருந்து பிசியை எடுத்து, பாலில் கலந்து குடித்து வந்தால், மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீர்ந்து போகும். பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோயையும் கூட தீர்க்கும்.

அகத்தியர் குணபாடம் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது தான் விளாம்பழம் என்பது நமக்குத் தெரியும். அது பாம்புக் கடியின் வீரியத்தைக் கூட குறைக்கும் பேராற்றல் இந்த விளாம்பழத்துக்கு உண்டு. அகத்தியர் மிகப்பெரிய சித்தர் என்பது நமக்குத் தெரியும். அவருடைய குண பாடத்தில் கனிகளிலேயே முதன்மையானதாக அவர் குறிப்பிடுவதே இந்த விளாம்பழத்தைத் தான்.

யானைக்கு பிடித்தது யானைக்கு வாழைப்பழம் தான் மிகவும் பிடிக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் யானை மிகவும் விரும்பிச் சாப்பிடுவது விளாம்பழத்தைத் தான். அப்படியே ஓட்டோடு சேர்த்து யானை சாப்பிட்டுவிடும். ஆனால் ஓடு மட்டும் மலத்தின் வழியே வெளியேற்றி விடும்.

சருமப் பிரச்சினைகள் பெண்களுடைய முகத்தில் உண்டாகின்ற பருக்கள் மற்றும் முகச் சுருக்கம் மற்றும் முக வறட்சிக்கும் மிகச் சிறந்த தீர்வாக அமையும். இந்த விளாம்பழம் முகத்துக்குப் பொலிவைத் தரும். விளாம்பழத்தின் விழுதினை சிறிதளவு எடுத்துக் கொண்டு, அதில் சிறிதளவு பசும்பால் அல்லது மோர் கலந்து முகத்துக்கு மாஸ்க் போல போட்டு, சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவி விடலாம். இதை இப்படியு தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால், இழந்த பொலிவை மீண்டும் பெற முடியும். குளியல் பொடி தயாரிக்கும் போது, இதனுடைய ஓட்டையும் சேர்த்துப் போட்டு தயாரித்தால், முகம் இளமை பெறும்.

காமம் மிகுதி சிலருக்கு காமம் மிகுதி மிக அதிக அளவில் இருப்பவர்கள் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்படுவார்கள். அவர்களுக்கு மிகச் சிறந்த தீர்வாக இந்த விளாம்பழம் இருக்கும். விளாம்பத்தின் ஓட்டினைப் பொடி செய்து, அதில் உணவிலோ அல்லது பாலிலோ கலந்து குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் நீா்த்துப் போகும். காம உணர்ச்சிகள் கட்டுப்படுத்தப்படும்.

1 1537255061

Related posts

சாதம் அதிக அளவு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா?தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம் சீக்கிரம் மாரடைப்பு வந்துடும்…. இந்த உணவுகளுக்கு ‘குட்-பை’ சொல்லுங்க…

nathan

சளி, இருமல், தொண்டை வலிக்கு இதம் தரும் திப்பிலி டீ

nathan

elakkai benefits in tamil – ஏலக்காயின் முக்கிய பயன்கள்

nathan

அற்புத மருத்துவ குணங்களை கொண்ட வெந்தயத்தின் பயன்கள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…விஷமாகும் தேனும் நெய்யும்….. எவ்வளவு சாப்பிடனும் தெரியுமா?

nathan

மிளகு, டீ தூளில் உள்ள கலப்படத்தை கண்டறிய வழிகள்

nathan

நீங்கள் பயன்படுத்தும் இந்த பொருட்கள் கெட்டுப்போகாமல் நீண்ட நாள் இருக்க வேண்டுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

ஏன் தினமும் மலையாளிகள் மரவள்ளிக் கிழங்கு சாப்பிடறாங்கன்ற ரகசியம் தெரியுமா?.

nathan