28 C
Chennai
Wednesday, Jul 9, 2025
heat
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

சாதாரண வெயில் தானே என்று எப்போதுமே எண்ணி விடாதீர்கள்!…

கால மாற்றம்

சரியான நேரத்தில் மழை, சீரான அளவு வெயில்…இப்படி பூமியில் இயக்கமே சீராக இருந்து வந்த காலம் முற்றிலுமாக மாறுபட்டு தலைகீழ் சுழற்சியை தற்போது சந்தித்து வருகிறது. மழை எப்போது வரும் என்றே தெரிவதில்லை.

ஆனால், வெயிலின் தாக்கம் மட்டும் பல மடங்கு அதிகமாக உள்ளது. துருவ பகுதியில் பனிக்கட்டிகள் உருகி பல அபாய எச்சரிக்கைகளை பூமி தாய் தந்து வருகிறாள். இவை எல்லாவற்றிற்கும் காரணம் மனிதன் மட்டுமே!

heat

தட்பவெப்பம்

சீரற்ற கால மாற்றத்தின் விளைவு மோசமான தட்பவெப்பம் தான். முன்பெல்லாம் வெயில் காலங்களில் வெளியில் சென்றால் அந்த அளவிற்கு சூரியனின் பாதிப்பு இருக்காது. ஆனால், தற்போது இதன் வீரியம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

இதனால் தட்பவெப்பமும் உயர்ந்துள்ளது. மனித உடலால் சராசரியாக 95.9°F to 99.5°F என்கிற அளவு தட்பவெப்பத்தை மட்டுமே தாங்கி கொள்ள முடியும். அதற்கு மேல் சென்றால் இதன் பாதிப்பு மோசமாகும்.

ஹைப்பர்தெர்மியா (Hyperthermia)

சுட்டெரிக்கும் வெயிலினால் கிடைக்கும் நோய் தான் ஹைப்பர்தெர்மியா. உடலில் தட்பவெப்பம் 104°F (40°C) அளவுக்கு மேல் இருந்தால் இந்த நோயின் பாதிப்பு அதிகமாக இருப்பதாக அர்த்தம்.

வருகின்ற கால கட்டத்தில் இதை விடவும் வெப்பம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹைப்பர்தெர்மியா நீடித்தால் மரணம் கூட நேரலாம்.

அறிகுறிகள்

இந்த நோயின் அறிகுறிகள் நாம் நினைப்பதை விடவும் அதிக அளவில் இருக்கும்.

– நீர்சத்து படிப்படியாக குறைதல்

– தலைவலி

– அதிக அளவில் வியர்த்து கொட்டுதல்

– தோல் சிவப்பாக மாறுதல்

– தசை வலி

– மயக்கம்

– சிறுநீர் மிக குறைவாக வெளியேறுதல்

– சுய நினைவை இழத்தல்

இப்படிப்பட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் உங்களுக்கு ஹைப்பர்தெர்மியாவின் பாதிப்பு உள்ளது என அர்த்தமாம்.

தாக்கம்

இந்த நோயின் தாக்கம் உயர்ந்தால் மேலும் சில வீரியமிக்க பாதிப்புகள் ஏற்படுமாம். குறிப்பாக,

– தோளில் உடனடியாக வெடிப்பு ஏற்படுதல்

– ஒவ்வொரு உறுப்பாக செயலிழத்தல்

– வலிப்பு

– கோமா நிலை

– இறுதியில் மரணம்

சாதாரண வெயில் தானே என்று எப்போதுமே எண்ணி விடாதீர்கள். இந்த வகை வெயிலால் தான் பாதிப்புகள் அதிகம்.

தீர்வு #1

ஹைப்பர்தெர்மியா போன்ற வெப்பத்தினால் உண்டாகும் பாதிப்பை தடுக்க அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். வெயில் காலத்தில் நமது உயிரை காக்கும் சிறந்த ஆயுதம் நீர் தான். மேலும், எலெக்ட்ரோலைட் கலந்த நீரை அருந்தினால் பலன் அதிகம். தினமும் 2 வேளை கட்டாயம் குளிக்க வேண்டும்.

தீர்வு #2

இறுக்கமான ஆடைகளை தவிர்த்து தளர்ந்த வகை ஆடைகளை உடுத்தவும். வெயில் காலங்களில் குறிப்பாக அடர்ந்த நிறங்கள் கொண்ட ஆடைகளை உடுத்தவே கூடாது.

வெளியில் சென்று வீடு திரும்பிய பின்னர் ஐஸ் பேக்குகளை தசைகளில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். வெளியில் செல்லும் போது அவசியம் குடை போன்றவற்றை எடுத்து செல்ல வேண்டும்.

தீர்வு #3

வீட்டிற்குள் நீரோட்டத்தை தரக்கூடிய மரங்களை நட்டு வைப்பது நல்லது. இது நல்ல காற்றோட்டத்தை தந்து, ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தும். மேலும், வெயில் காலங்களில் சுவாச கோளாறுகள் ஏற்படாதவாறு பார்த்து கொள்வது அவசியம்.

உங்களை சுற்றி இருக்கும் இடத்தை காற்றோட்டமாக வைத்து கொண்டாலே ஹைப்பர்தெர்மியா நோயின் பாதிப்பு குறைவு.

யாருக்கெல்லாம் பாதிப்பு?

பெரும்பாலும் வெயில் காலங்களில் சூரியனின் வெப்பத்தில் அதிக நேரம் இருப்போருக்கே இந்த நோயின் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும்.

விவசாயிகள், கூலி வேலை செய்வோர், கட்டிட வேலை செய்வோர், வெளி விளையாட்டுகளில் கலந்து கொள்வோர் போன்றோருக்கு ஹைப்பர்தெர்மியா அதிக அளவில் இருக்க கூடும். எனவே, மேற்சொன்ன குறிப்புகளை நினைவில் வைத்து கொண்டு இந்த நோயில் இருந்து தப்பிக்கலாம்.

Related posts

குடிக்கும் தண்ணீரைப் பற்றிய 6 மூடநம்பிக்கைகள்!!!

nathan

பல்வேறு சத்துக்கள் வாழைக்காயில்அடங்கியுள்ளது!…

sangika

heath tips.. தொப்புளில் எண்ணெய் வைத்தால் உண்டாகும் நல்ல குணங்கள்

nathan

சோற்றுக்கற்றாழை சாறு பருகுவதால் ஏற்படும் நன்மைகள்

nathan

மூக்கடைப்பு பிரச்சனையா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

தரித்திரம் வரிசை கட்டி வருமாம்! இந்த 5 கெட்ட பழக்கத்தினை உடனே மாற்றிடுங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்களுக்கு இடுப்பு மடிப்பு ஏற்பட்டால்.. இந்த நோய்களும் வருமாம்.. தடுக்க என்ன செய்யலாம்..!

nathan

இத படிங்க வெந்தயத்தை தேநீர் செய்து குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்…!!

nathan

இந்த 5 ராசி பெண்கள் நாடகமாடுவதில் கில்லாடிகளாம்..தெரிந்துகொள்ளுங்கள் !

nathan