28.9 C
Chennai
Tuesday, Jan 27, 2026
coconut milk
அழகு குறிப்புகள்ஆண்களுக்குஆரோக்கியம்

ஆண்மைச் சக்தி அதிகரிப்பதோடு வயிற்றுப்பூச்சிகள் நீங்க தேங்காய்!…

பொது மருத்துவம்:புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப்பொருள்கள், வைட்டமின் சி, அனைத்துவகை ‘பி’ காம்ப்ளக்ஸ் சத்துகள், நார்ச்சத்துகள் உள்ளிட்ட உடல் இயக்கத்துக்குத் தேவையான அனைத்து சத்துகளும் தேங்காயில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தேங்காயில் உள்ள ஃபேட்டி ஆசிட் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கக்கூடியது. உடல் எடையையும் குறைக்கிறது என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குறிப்பாக தேங்காயில் அதிகம் இருப்பதால் அது உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கிறது.

coconut milk

தேங்காய்ப்பாலில் காரத்தன்மை உள்ளதால் அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப்புண்ணுக்கு தேங்காய்ப்பால் அருமையான மருந்தாகச் செயல்படுகிறது. தேங்காயை அரைத்து அதனுடன் நாட்டுச்சர்க்கரைச் சேர்த்துச் சாப்பிட்டால் ஆண்மைச் சக்தி அதிகரிப்பதோடு வயிற்றுப்பூச்சிகள் நீங்கும்

சுத்தமான தேங்காய் எண்ணெய் புரதச்சத்து நிறைந்திருப்பதால், வாரம் ஒருநாள் தேங்காய் எண்ணெய்யை தலையில் தேய்த்து ஊற வைத்து குளித்து வந்தால் பெண்களின் கூந்தல் வேர்க்கால்கள் பலமடைவதோடு, பொடுகுத்தொல்லை நீங்கும்.

கேரளத்துப் பெண்கள் தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்துவதோடு அன்றாட சமையலிலும் தேங்காய் எண்ணெயைதான் பயன்படுத்துகின்றனர்.

தேங்காய் எண்ணெய் சருமத்தை பாதுகாப்பதில் மிகச்சிறந்த பலனைத் தருகிறது. சரும வறட்சியை போக்குவதில் சிறந்த மாய்ஸரைசராக செயல்படுகிறது. இதில் உள்ள கொழுப்புச்சத்து சரும சுருக்கத்தை போக்குகிறது. இதனால் சருமத்திற்கு எவ்வித பக்கவிளைவும் ஏற்படுவதில்லை. முகம் பொலிவுப் பெற உதவும்.

தேங்காய் எண்ணெயில் உள்ள பாக்டீரிய எதிர்ப்புப் பொருள் தோல் பூஞ்சை நோய்களை கட்டுப்படுத்துகிறது. உடலுக்கு மட்டுல்லாது குடலுக்கும் பாதுகாப்பு தருகிறது. ஜீரண சக்தியை சீராக்கி மலச்சிக்கலை நீக்குகிறது.

அ‌திகமாக மே‌க்-அ‌ப் போடு‌ம் பெ‌ண்க‌ள், இர‌வி‌ல் மு‌க‌த்தை சு‌த்த‌ம் செ‌‌ய்து‌ வி‌ட்டு தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை தட‌வி‌க் கொ‌ண்டு படு‌க்கலா‌ம். இதனா‌ல் சரும‌த்‌தி‌ற்கு ந‌ல்ல பொ‌லிவு ‌கிடை‌க்கு‌ம்

Related posts

ஃபேஷியல் எண்ணெய்களை சருமத்திற்குப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்..

nathan

வெளியான அதிரடி அறிவிப்பு! நடிகர் விவேக் மரண வழக்கு!

nathan

ஆண்களே! முகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க…

nathan

சளி, காய்ச்சல், உடல்வலியால் அவதிப்படுபவர்கள் இந்த மூலிகை டீயை போட்டு குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது…..

sangika

போரில் உக்ரைன் அதிபரை கொல்ல முயற்சி -வெளிவந்த தகவல் !

nathan

என் ரசனைக்கு அவரால் ஒத்துழைக்க முடியல… கணவருக்கும் 16 வயது வித்தியாசம்!

nathan

சுக்கு இருந்தால் உங்களுக்கு நோய் என்ற பகைவன் இருக்காது!

sangika

அழகுக்கும் ஆரோக்கியத்துக்குமான சீக்ரெட்..

nathan

வயதிற்கு ஏற்ற உடற்பயிற்சிகள்

nathan