31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

போரில் உக்ரைன் அதிபரை கொல்ல முயற்சி -வெளிவந்த தகவல் !

உக்ரைன் மீது ரஷ்யா மூன்றாவது மாதமாக போர் தொடுத்து வரும் நிலையில், இந்த போரில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை கொல்லவும், சிறை பிடிக்கவும் ரஷியா முயற்சித்தது இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

மேலும், உக்ரைன் மீது போர் தொடுத்ததில் இருந்து, அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியையும், அவரது குடும்பத்தினரையும் குறி வைத்து தலைநகர் கீவிற்கு தாக்குதல் குழுக்கள் வந்து இருக்கின்றன.

தொடர் தாக்குதல்
இதுபற்றி ராணுவ உளவுத்துறை மூத்த அதிகாரி ஒலெக்சிய் ஆரெஸ்டோவிச் தெரிவிக்கையில், முதல் நாள் இரவில் அதிபர் மாளிகை வளாகத்தின் அருகே துப்பாக்கிச் சண்டைகள் நடந்தன.

 

அதிபரும், அவரது உதவியாளர்களும் குண்டு துளைக்காத உடைகளையும், தாக்குதல் துப்பாக்கிகளையும் பெற்றனர். அனைவருக்கும் தானியங்கி துப்பாக்கிகள் வழங்கப்பட்டன என தெரிவித்தார்.

குற்றச்சாட்டு
இந்நிலையில், கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் உள்ள உயிர்களை அழிக்க ரஷியா தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து வருவதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டி உள்ளார்.

உக்ரைன் மீதான தாக்குதல் தொடர்வதாக ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் கூறி இருக்கிறார். உக்ரைனில் இருந்து 10 லட்சத்துக்கும் அதிகமானோரை வெளியேற்றி இருப்பதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கோடைக்காலங்களில் சரும நோய்

nathan

உங்களுக்கு தெரியுமா 2022 இல் இந்த அதிர்ஷ்ட எண் உங்க சக்தியை மின்னல் வேகத்தில் அதிகரிக்கும்….

nathan

சருமத்திற்கு ஆரஞ்சு தோல் அழகு குறிப்புகள்!!

nathan

பெண்கள் தனியாக சுற்றுலா செல்லும் போது செய்யக்கூடாதவை!…

sangika

உதடுக்கு லிப்ஸ்டிக் போடுவது எப்படி?

nathan

வயதானலும் அழகாக இருப்பது எப்படி?

nathan

வறண்ட சருமத்தை கையாள நீங்கள் வீட்டிலேயே முயற்சி செய்து பார்க்கக் கூடிய சில எளிய தீர்வுகள்

nathan

சூப்பர் டிப்ஸ்.. சரும அழகை மேம்படுத்தும் டைட்னிங் பேஷியல் செய்வது எப்படி…?

nathan

ஆண்களுக்கான சில எளிய அழகுக்குறிப்புகள்!…..

sangika