31.9 C
Chennai
Friday, Mar 13, 2026
face1
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

அவரவர் முக அமைப்பிற்கேற்ற டிப்ஸ்!…

பொதுவாகவே ஒவ்வொருவரின் உடல் அமைப்பும் பலவிதமாக இருக்கும். இது எல்லா உறுப்புகளுக்கும் இதே நிலை தான். அந்த வரிசையில் நம் முகமும் அடங்கும். முகத்தில் பலவித மாற்றங்கள் எப்போதுமே உண்டாகும். சில மாற்றங்கள் முகத்தை அழகு பெற செய்யும். ஆனால், முகத்தை பாதிக்க கூடிய மாற்றங்கள் உண்டாகினால் அவ்வளவு தான்.

முகத்தின் அழகை இயற்கையாகவே பெற வேண்டுமென்றால் உங்களின் முகத்திற்கேற்ப முக பூச்சுகளை பயன்படுத்த வேண்டும்.

ஒரு சிலருக்கு எண்ணெய் வடியும் முக அமைப்பு இருக்கும், சிலருக்கு வறட்சியான சருமம் இருக்கும், வேறு சிலருக்கு முகம் எப்போதுமே சாதாரண நிலையிலே இருக்கும்.

இந்த பதிவில் அவரவர் முக அமைப்பிற்கேற்ற டிப்ஸ்களை பார்க்கலாம்.

face1

வறட்சியான முகம்

முகத்தில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பவர்களுக்கு எளிய வழி உள்ளது. இதற்கு கற்றாழை, கிரீன் டீ, வெள்ளரிக்காய் போன்றவற்றை முகத்தில் பயன்படுத்தலாம். இந்த குறிப்புகள் முகத்தின் வறட்சியை குறைத்து விடும்.

அழுக்குகள் கொண்ட முகம்

வெளியில் அதிகம் சுற்றி திரியும் உங்கள் முகத்தில் பல்வேறு அழுக்குகள், கிருமிகள் குடியிருக்கும். இவை தான் முகத்தின் அழகை கெடுக்கிறது.

இதனை போக்குவதற்கு அண்ணாச்சி பழம், பப்பாளி போன்ற அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்ட பழங்கள் உதவும்.

எண்ணெய் வடிதல்

முகத்தில் எப்போதுமே எண்ணெய் வடிந்து கொண்டே இருந்தால் அவர்களுக்கு சிறந்த தீர்வு களிமண் ஃபேஸ் மாஸ்க் தான்.

குறிப்பாக முல்தானி மட்டி போன்ற முகப்பூச்சிகள் இவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். இதனுடன் பன்னீர் அல்லது தேன் கலந்து முகத்தில் தடவினாலே எண்ணெய் வடிதல் மற்றும் பருக்கள் இல்லாமல் இருக்கும்.

கருமை முகத்திற்கு

முகத்தை பொலிவாகவும் மினுமினுக்கவும் வைக்க இந்த ஃபேஸ் மாஸ்க் உங்களுக்கு உதவும். இதனை பீல் ஆப்ஃ மாஸ்க் என்று கூறுவார்கள்.

இது முகத்தின் கருமையை நீக்கி பளபளக்க வைக்கும். இதற்கு ஓட்ஸை, சர்க்கரை போன்றவை சிறந்த வழியாகும்.

சுருக்கங்கள் கொண்டதா?

உங்களின் முகம் அதிக சுருக்கங்கள் நிறைந்து வயதான தோற்றத்தை தருகிறதா? இதற்கு தீர்வை தர ஹைட்ரஜன் மாஸ்க் உள்ளது. இந்த மாஸ்க் முகத்தின் சுருங்கங்களை போக்கி அழகான இளமை சருமத்தை தரும்.

துளைகள் உள்ளதா?

முகத்தின் பல பகுதிகளில் அதிக அளவில் துளைகள் இருந்தால் அதற்கு தெர்மல் மாஸ்க் சிறந்த தீர்வு.

இது முகத்தில் உள்ள துளைகளை அடைத்து முகத்தை அழகாக மாற்றி விடும். மேலும் இந்த மாஸ்க் முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும் வழி செய்கிறது.

சாதாரண முகம்

சாதாரண முகத்தை கொண்டோருக்கு பழங்கள் கொண்ட எல்லாவித ஃபேஸ் மாஸ்க்கும் சிறந்த பலனை தரும். மேலும், இந்த மாஸ்குகள் அனைத்துமே முக அழகை மெருகேற்ற பெரிதும் உதவும்.

வாரத்திற்கு ஒரு முறை இந்த ஃபேஸ் மாஸ்க்குகளை பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றம் உங்களின் முக அழகில் தென்படும்.

 

Related posts

குளிர் காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க..

nathan

குளிர்பானத்தில் விஷம் கலந்து காதலனை கொன்ற விவகாரம் :கதறி அழுத காதலி!!

nathan

உங்களுக்கு தெரியுமா முல்தானி மெட்டியால் கிடைக்கும் 10 அழகு நன்மைகள்!!!

nathan

சாக்லேட் எப்படி உங்களுக்கு சூப்பர் அழகை தரும் தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…குடிக்கிற தண்ணியில இந்த பொடிய கொஞ்சம் கலந்து குடிச்சா போதும்! எவ்ளோ வெயிட்டா இருந்தாலும் குறையும்

nathan

உங்கள் சருமம் எப்பொழுதும் எண்ணெய் பசையுடன் காணப்படுகிறதா?.. அப்ப தினமும் செய்யுங்க…

nathan

சூப்பர் டிப்ஸ்! முகம் பளபளப்பாகவும் இளமையுடனும் இருக்க சில அழகு குறிப்புகள்…!

nathan

முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை போக்கும் பேஸ் பக்…Face pack

nathan

மற்றவர்களை மயக்க வேண்டுமா? இதோ சூப்பர் பேஷியல்

nathan