30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
முகப் பராமரிப்பு

முக அழகில் முதன்மையானது புருவ அழகு

பெண்களுக்கு முதன்மையான அழகு கண்கள் தான். கண்களை மட்டும் நன்றாக அலங்கரித்து விட்டால் பாதி அழகு வந்துவிடும். அந்த கண்களின் அழகை பிரதிபலிக்க உதவுவது புருவங்கள். அழகிய புருவம் கொண்ட பெண்கள் முகம் எப்போதும் பளிச் சென்று எடுப்பாக தெரியும். புருவங்களை பராமரிக்க எளிமையான டிப்ஸ் இதோ.

புருவங்களின் முடி வளர்ச்சிக்கு விளக் கெண்ணெய் மிகவும் முக்கியம். அதனுடன் சமஅளவு பாதாம் எண்ணெயும், ஆலிவ் எண்ணெய் அல்லது அரோமா எண்ணெய் கலந்து மசாஜ் செய்யலாம். இது புருவங்களில் உள்ள ரோம வளர்ச்சிக்கு உதவுவதுடன் அப்பகுதியில் ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. எண்ணெய் தடவி மசாஜ் செய்வதற்கு முன்பாக இரண்டு, மூன்று முறை கிள்ளி விடுவது போல் அழுத்தம் கொடுக்கவேண்டும்.

மசாஜ் செய்வதால் முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர உதவிசெய்கிறது. தினசரி குளிக்க செல்லும் முன்பு புருவங்கள் மேல் எண்ணெய் தடவி ஊறிய பின்பு குளிக்கலாம். இது புருவங்களை அழகு படுத்துகிறது. புருவங்களை எப்போதும் திரெடிங் முறையில் அகற்றுவதே நல்லது. சில பெண்கள் வாக்சிங் முறையில் புருவங்களில் உள்ள முடிகளை அகற்றுகின்றனர் இது தவறானது.

இவ்வாறு செய்வதால் தசைகள் சுருங்கி தொய்ந்து போகிறது. பிளேடு பயன்படுத்தி சிலர் புருவ முடிகளை சேப் செய்கின்றனர். இது மிகவும் ஆபத்தானது. அவ்வாறு அகற்றுபவர்களுக்கு புருவங்களில் முடி விரைவாக வளரும். அதுதவிர வளரும் முடிகள் மிகவும் திக்காகவும், தாறுமாறாகவும் முறையற்றும் வளரும். புருவங்களில் நரைமுடி இருப்பின் மஸ்காரா பயன்படுத்தி கருமையாக்கலாம்.

மஸ்காரா பிரஷ்சை காயவைத்து லேசாக நரைமுடிகளில் தடவலாம். ஐ ப்ரோ பென்சில் பயன்படுத்துவதை காட்டிலும் இதுபோன்று செய்வது அழகாவும், இயற்கையாகவும் இருக்கும். கண்களுக்கு அடிக்கடி ஐ பேட் உபயோகிக்கலாம் இதன் மூலம் கண்கள் குளிர்ச்சி அடைவதுடன் புருவங்களும் நன்கு வளரும்.

Related posts

கரும்புள்ளியை போக்க வெங்காயமும் பூண்டும் போதும்!

nathan

தெரிஞ்சிக்கங்க…பெண்கள் விரும்பும் 5 விதமான பிங்க் ஷேடட் லிப்ஸ்டிக்குகள்!!!

nathan

வீட்டிலேயே அழகாகலாம் ! ஆயுர்வேத டிப்ஸ்!!

nathan

முகத்தில் வழியும் எண்ணெய்யை போக்க சில வழிகள்

nathan

பெண்களே உங்க கன்னங்கள் அழகாக ஜொலிக்க இத ட்ரை பண்ணுங்க

nathan

உங்களுக்கு பரு உடைந்து புண்ணாகாமல் அப்படியே அமுங்கணும்மா?

nathan

தினமும் இரவில் படுக்கும் முன் இவற்றை செய்தால் சீக்கிரம் வெள்ளையாகலாம்!

nathan

அடர்த்தியான புருவங்கள் வேண்டுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

இந்த ஜூஸ்களில் ஏதேனும் ஒன்றை தினமும் ஒரு டம்ளர் குடிச்சா.. நீங்க சீக்கிரம் வெள்ளையாவீங்க..!

nathan