சூரியனே போதும்..!
நீங்க 100 வயசு வரைக்கும் வாழ முதலில் இத கடைபிடிங்க. ஒரு நாளைக்கு குறைந்தது 10 முதல் 15 நிமிடம் சூரிய ஒளி உங்கள் மீது பட வேண்டும். இது வைட்டமின் டி-யை உங்கள் உடலுக்கு அதிகம் உற்பத்தி செய்து நீண்ட நாட்கள் வாழ வழி வகுக்கும்.
இந்த நிலை வேண்டாமே..!
சின்ன சின்ன பிரச்சினைக்கும் மன உளைச்சல் அடையாமல் இருங்கள். உங்களது மகிழ்ச்சியான மன நிலைதான் ஹார்மோனை சமமான அளவு சுரக்க செய்து உங்களது உடல் நலத்தை ஆரோக்கியமாக வைக்கும். எனவே, மன அழுத்தத்திலே எப்போதும் இருக்காதீர்கள்.
ஒரே இடத்திலையா..?
கணினி முன் வேலை செய்யும் பலரும் இந்த தவறை செய்கின்றனர். அதாவது, எந்த ஒரு இடத்திலும் 2 மணி நேரத்திற்கு உட்கார்ந்திருக்க கூடாதாம். இது பலவித உடல்நல குறைபாட்டை ஏற்படுத்துமாம். மேலும், இதய பிரச்சினைகள், தசை சார்ந்த பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். இந்த செயல் உங்கள் ஆயுளை குறைக்க கூடும்.
அதிகமா..? குறைவா..?
பலரும் இந்த தவறை செய்கின்றனர். நாம் உழைக்கும் உழைப்புக்கு ஏற்ற தூக்கமே போதுமானது. அளவுக்கு அதிகமாக தூங்குவதும், அளவுக்கு குறைவாக தூங்குவதும் உங்கள் ஆயுளை குறைத்து விடும். எனவே, 7 மணி நேரம் தூக்கமே உங்களுக்கு சராசரியாக போதுமானது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மாத்திரைகளே எமன்..!
எதற்கெடுத்தாலும் மாத்திரை சாப்பிடும் பழக்கம் இன்று பலருக்கும் உள்ளது. இது பலவித ஆபத்தை நமக்கு தரவல்லது. சிறிது நேரம் தூக்கம் வரவில்லை என்றாலும் மாத்திரை போட்டு தூங்கும் பழக்கம் தொடர்ச்சியாக மாறிவிட்டது. இது போன்ற பழக்கம் தான் உங்கள் ஆயுளை நிச்சயம் குறைத்து விடும்.
இத சாப்பிடுங்க..!
நீங்கள் 100 வயசு வரைக்கும் வாழ வேண்டுமென்றால் இந்த உணவை அதிகம் சாப்பிட வேண்டும். பீன்ஸை உணவில் சேர்த்து கொண்டால் ஆயுள் நீளும். அத்துடன் இதய ஆரோக்கியமும் அதிகரிக்க கூடும்.
இதுவும் தேவைதான்..!
தம்பதிகள் இனிமையான வாழ்க்கை வாழ்ந்தாலே ஆயுள் கூடும் என ஆய்வுகள் சொல்கின்றன. குறிப்பாக வாரத்திற்கு 1 அல்லது 2 முறை தாம்பத்தியம் வைத்து கொள்வது சிறந்தது. இது உங்களை ஆரோக்கியமாக வைத்து கொள்வதோடு, ஆயுளையும் நீட்டிக்கும்.
அதிகம் தேவை..!
பக்கத்தில் இருக்கும் கடைக்கு கூட பைக்கில் போகும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. இந்த மாதிரியான பழக்கங்கள் சோம்பேறித்தனத்தை தந்து, நமது ஆயுளை குறைத்து விடும். எனவே, எவ்வளவு தூரம் நடக்கிறீர்களோ அதை பொருத்து தான் உங்களின் ஆயுள் கூடும்.
இனிப்பு இவ்வளவா..?
“சுவீட் எடு.! கொண்டாடு.!” என்கிற வாசகத்தை தாரக மந்திரமாக எடுத்து கொள்ளலாம், மிக குறைவான அளவே இனிப்பு வகைகளை உங்கள் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த வகை உணவுகள் உங்களது உயிரை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து எடுத்து விடும்.
கொழுப்பு உணவுகளுக்கு நோ நோ..!
மனதில் நினைக்கும் அனைத்தையும் சாப்பிட வேண்டும் என்கிற எண்ணத்தை முதலில் மாற்றி கொள்ளுங்கள். இது பலவித அபாயத்தை உங்களுக்கு ஏற்படுத்த வல்லது. குறிப்பாக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவோருக்கு ஆயுள் குறையும் என ஆய்வுகள் சொல்கின்றன. இந்த கொழுப்பு உணவுகள் உங்களின் ஆயுளில் பாதி நாட்களை பறித்து கொள்ளும்.
புகை ஆயுளுக்கு பகை..!
புகை பழக்கத்தை பற்றி எவ்வளவோ பிரசாரம் செய்தாலும் நாம் இதை விட்டபாடு இல்லை. புகைப்பவர்களின் ஆயுளை மெல்ல மெல்ல குறைத்து விட கூடிய தன்மை இதற்கு உண்டு. புகையினால் மோசமான கோரமான மரணம் வேண்டுமானால் உங்களுக்கு பரிசாக கிடைக்கலாம்.
எதிர்மறை எண்ணங்கள் வேண்டாமே..!
100 வயசு வரை வாழ வேண்டுமென்றால் முதலில் இதை நினைவில் கொள்ளுங்கள். அதாவது, எப்போதும் எதிர்மறையான எண்ணங்களை நினைக்காமல் நேர்மறையான எண்ணங்களை பெற்றியே எண்ணுங்கள். இது தான் உங்களுக்கு 100 சதவீத வாழ்வை தரும்.