27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
sit work
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

அமர்ந்து வேலைசெய்பவர்கள் கட்டாயம் இத படிங்க!

பெண்கள் அலுவலகத்திற்கு சென்றால் கணினி முன் அமர்ந்தே வேலை செய்கிறார்கள். காலையில் 9 மணிக்கு உட்கார்ந்தால் மதியம் ஒரு மணிக்கு மதிய உணவிற்கு எழுந்திருக்கிறார்கள்.

பிறகு பசியாறுவதற்கும் உட்கார்ந்து பசியாறிவிட்டு, பிறகு மீண்டும் கணினி முன் அமர்ந்து மாலை 5 மணி வரை வேலை செய்துவிட்டு, துதி சக்கர வாகனத்திலோ அல்லது பஸ்ஸிலோ உட்கார்ந்து கொண்டு வீட்டிற்கு பயணிக்கிறார்கள். வீட்டிற்கு சென்று, சோபா அல்லது நாற்காலியில் தொப்பென்று உட்கார்ந்து ரிவி, தொலைபேசி, ஃபேஸ்புக் என நேரத்தை உட்கார்ந்து கொண்டே செலவழித்துவிட்டு பிறகு மீண்டும் படுக்கைக்கு உறங்கச் சென்றுவிடுகிறார்கள்.

sit work

இதனால் உலகத்தில் நான்கில் ஒருவர் ஒரு நாளைக்கு எட்டுமணிநேரத்திற்கு மேல் உட்கார்ந்தேயிருக்கிறார்கள் என்று அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு மனிதர்களின் ஆரோக்கியம் கேள்வி குறியாகிறது.

அதிலும் தொடர்ச்சியாக ஒரு மணி நேரத்திற்கு மேல் அமர்ந்து வேலைசெய்பவர்கள், கேடராக்ட், டயாபடீஸ், க்ரானிக் லங் டீஸீஸ், கிரானிக் கிட்னி டிஸீஸ், ஆஸ்மா, அல்ஸைமர் உள்ளிட்ட ஏராளமான நோய்களின் பாதிப்பிற்கு ஆளாக நேரிடலாம். உடலுழைப்பு இயல்பான அளவை விட குறைவதாலும், உணவு பழக்கத்தை முற்றிலும் மாற்றியமைத்துக் கொண்டிருப்பதாலும் இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகிறார்கள்.

அதனால் இனிமேல் தொடர்ச்சியாக முப்பது நிமிடத்திற்கு மேல் ஓரிடத்தில் அமர்ந்திருக்க வேண்டாம். அரை மணி தியாலத்திற்கு ஒரு முறை எழுந்து ஒரிரு நிமிட நடைக்கு பின்னர் மீண்டும் அரை மணிநேரம் உட்கார்ந்து பணியாற்றலாம். இதனை கடைபிடித்தால் ஹோர்மோன் சுரப்பிகளின் செயல்பாட்டிலும் ஒரு சீரான தன்மை உருவாகும். ஆரோக்கியத்தை காக்கும். உயிரிழப்பிலிருந்து பாதுகாக்கும்.

Related posts

40 வயதிற்கு மேல் ஏற்படும் தொப்பையை தவிர்க்கலாம். அதற்கான ஆதாரம் இங்கே இருக்கிறது

nathan

ஹெல்த் ஸ்பெஷல்.. தைராய்டு பிரச்சனையின் போது உடல் எடையை குறைப்பது எப்படி?

nathan

உடல் எடையை சீக்கிரமா குறைக்க உதவும் ஆறு வழிகள் என்னென்ன தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan

தலை முடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்க பிளாக் டி!….

nathan

அக்குள் மிகவும் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன….

sangika

ஒவ்வொரு மனைவிக்கும் இப்படியொரு கணவர் அமைந்தால்…. தேவதர்ஷினியின் வெற்றிக்கு பின்னால் நிற்கும் ஒரே நபர்

nathan

நீங்கள் நல்ல சம்பளம் இருந்தும் பிடிக்காத வேலையில் இருக்கீங்களா? இதோ உங்களுக்காக டிப்ஸ்.!

nathan

சூப்பர் டிப்ஸ்! தலைவலி, வாந்தி பிரச்சனைகளுக்கு மருந்தாகும் ஏலக்காய் எப்படி பயன்படுத்தலாம்.?

nathan

இத படிங்க அல்சர் வருவதற்கான முக்கிய காரணங்கள் என்ன….?

nathan