33.9 C
Chennai
Sunday, Jul 12, 2026
ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இந்தக கலவை சிறந்ததாக இருக்கும்!…

மாற்றம் ஏன்..?

பெரும்பாலும் உணவுகளை வேறொரு உணவோடு சேர்த்து சமைத்து சாப்பிடும்போது அதன் பலன் இரட்டிப்பாகி விடும். இது இயல்பான ஒன்றுதான்.

என்றாலும், எல்லா வகையான உணவுகளில் இது ஏற்படுவதில்லை. இப்படி கலவையாக சேரும்போது தாதுக்களும், ஊட்டச்சத்துக்களும் அதிகரிக்கிறது.

பூண்டும் மீனும்

நாம் சாப்பிட கூடிய மீனில் கொஞ்சம் பூண்டை பொடிசாக நறுக்கி சமைத்து சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து விடும்.

இதனால் இதயம் சார்ந்த பிரச்சினைகள் வருவதை தடுத்து விடலாம். மேலும், வாயு தொல்லையும் குறையும்.

யோகர்டும் வாழைப்பழமும்

இந்த கலவையில் பொட்டாசியமும், புரதச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளது. தசைகளின் வளர்ச்சியை அதிகரித்து ஆரோக்கியத்துடன் இருக்க வழி செய்கிறது.

உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இந்தக கலவை சிறந்ததாக இருக்கும்.

கிரீன் டீயும் எலுமிச்சையும்

கிரீன் டீயில் எலுமிச்சை சாற்றை சேர்த்து குடித்தால் உடலின் மெட்டபாலிசம் கூடும். அத்துடன் உடனடியாக எனர்ஜியை பெற்று தந்து சோர்வை போக்கி விடும்.

சாதரணமாக இந்த கிரீன் டீயை குடிப்பதை விட இப்படி எலுமிச்சையோடு சேர்த்து குடித்தால் 13 மடங்கு ஆற்றலை அதிகமாக எடுத்து கொள்ளும்.

ஆப்பிளும் சிவப்பு ஒயினும்

இந்த கலவை உணவை பற்றிய ஆராய்ச்சியில் ஒரு முக்கிய தகவலும் வெளி வந்துள்ளன. அதாவது, ஆப்பிளும் ரெட் ஒயினும் அருமையான கலவையாம்.

இதனை சேர்த்து சாப்பிடுவதால் உடலில் ஏற்பட்டுள்ளவீக்கங்கள் குறையும். மேலும், ரத்தம் உறைதலை தடுத்து சீரான உடலை தரும்.

மாட்டிறைச்சியும் கேரட்டும்

உங்களின் எதிர்ப்பு சக்தியை இரட்டிப்பாக வைக்கும் ஆற்றல் இந்த கலவைக்கு உள்ளது. இந்த இறைச்சியில் அதிக அளவு ஜின்க் உள்ளது.

எனவே, உடல் வலிமையை அதிகரித்து ஆரோக்கியத்துடன் இவை வைத்து கொள்ளும்.

முட்டையும் முளைக்கீரையும்

முட்டையுடன் முளைக்கீரையையும் சேர்த்து சாப்பிட்டால் இதன் பலன் இரட்டிப்பாகி விடும். குறிப்பாக ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உடலில் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். மேலும் இதய நோய்கள், புற்றுநோயில் இருந்தும் உங்களை காக்கும்.

தக்காளியும் ஆலிவும்

மற்ற வகை உணவுகளை விட இதன் கலவை துரிதமாக உடலில் வேலை செய்யுமாம். இவற்றில் உள்ள லிகோபைன் என்கிற மூல பொருள் புற்றுநோயை தடுத்து, இதய பிரச்சினைகள் இல்லாமல் வைத்து கொள்ளும். எனவே, தக்காளியை ஆலிவ் எண்ணெய்யில் சமைத்து உண்ணுங்கள்.

காலை உணவாக

காலையில் ஓட்ஸுடன் ஆரஞ்சு ஜுஸை சேர்த்து சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் கிடைக்கும்.

இந்த கலவை கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைத்து செரிமான கோளாறு ஏற்படாதவறு பார்த்து கொள்கிறது.

சக்கரைவள்ளி கிழங்கும் மிளகாயும்

சர்க்கரை வள்ளிக்கிழங்கை வெறுமையாக சாப்பிடுவதை விட மிளகாய் சேர்த்தது சமைத்து சாப்பிட்டால் அருமையான தீர்வு கிடைக்கும்.

இவற்றில் பீட்டா கேரட்டின், வைட்டமின் எ நிறைந்துள்ளதால் நல்ல சுவையை கூட்டி எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறதாம்.

Related posts

தேன் சாப்பிட்டா கூட இவ்வளவு பிரச்சினை வருமா! தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

vitamin b foods in tamil – வைட்டமின் B-வகைகள்

nathan

தினமும் காலையில் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

குழந்தைகளுக்கு அலர்ஜி வருவது எப்படி கண்டு பிடிப்பது….?

sangika

சில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், உங்கள் குழந்தைகளை தாய்ப்பால் குடிப்பதில் இருந்து நிறுத்திவிடலாம்.

nathan

எச்சரிக்கை! தந்தூரி உணவை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு ஏற்படும் உபாதைகள்

nathan

உங்களுக்கு இந்த உண்மை எல்லாம் தெரிஞ்சா, இனிமேல் நீங்க வெள்ளை சர்க்கரை யூஸ் பண்ணவே மாட்டீங்க!

nathan

ஆப்பிளை விட கொய்யாவை அதிகம் சாப்பிட வேண்டும்!!

nathan

தோசைக்கல்லில் ஓட்டிக் கொள்ளாமல், புண்டு போகாமல் மொறுமொறுவென்று ருசியான முழுமையான‌ தோசை

nathan