banana1
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

வாழைப்பழத்தை இப்படியும் பயன்படுத்தலாமா? இதை முயன்று பாருங்கள்!…

வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை எதிர்த்துப் போராடுகிறது. இதனால் சருமம் இளமையாகத் தோற்றமளிக்கும். முதுமையைத் தடுப்பதற்கு ஃபேஸ் மாஸ்க்காக வாழைப்பழத்தை பல வழிகளில் பயன்படுத்தலாம்.

வாழைப்பழத்தையும் வெண்ணெய்ப்பழத்தையும் ஒன்றாகப் பிசைந்து முகத்திலும் கழுத்திலும் மாஸ்க் போடவும். சுமார் 25 நிமிடங்கள் வரை காத்திருந்து, பிறகு கழுவவும்.

முதுமையைத் தடுக்க உதவும் மற்றொரு ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கும் முறை: வாழைப்பழத்தில் பன்னீர் சில துளிகள் விட்டுப் பிசைந்து அதனை ஃபேஸ் மாஸ்க்காகப் போட்டு அரைமணி நேரம் அல்லது ஒரு மணிநேரம் விட்டு பிறகு கழுவலாம்.

banana1

வாழைப்பழத்தைக் குழைத்து, ஃபேஸ் மாஸ்க்காகப் போடவும். 20-25 நிமிடங்கள் கழித்து கழுவவும். சருமம் வறண்டு போயிருந்தால், இதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளலாம். இன்னும் முகப் பொலிவு பெற, ஒரு டீஸ்பூன் வைட்டமின் E (வைட்டமின் E காப்சூலை உடைத்து அப்படியே அதிலுள்ளவற்றை ஊற்றிக் கலக்கினால் போதும்) மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் தயிரையும் சேர்த்துக்கொள்ளலாம். இதில் பொட்டாசியமும் நீரும் நிறைந்திருப்பதால், சருமத்தில் நீர்ச்சத்தைத் தக்கவைத்து சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைத்துக்கொள்ள வாழைப்பழம் உதவுகிறது.

உங்கள் முகத்திலோ முகப்பரு உள்ள பகுதிகளிலோ வாழைப்பழத் தோலின் உட்பகுதியை வைத்துத் தேய்த்தால் போதும். அழற்சியைக் குறைக்கிறது. பிசைந்த வாழைப்பழத்துடன் மஞ்சள் பொடி, தேன் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்தும் ஃபேஸ் மாஸ்க் போடலாம். அது முகப்பருக்களை ஒழிப்பது மட்டுமின்றி, சருமத்திற்கும் இயற்கையான பளபளப்பையும் பொலிவையும் கொடுக்கும்.

கரும்புள்ளிகளின்மீது வாழைப்பழத் தோலைத் தேய்த்தால் அல்லது பிசைந்த வாழைப்பழத்தையே தேய்த்தால் வயதாவதால் தோன்றும் புள்ளிகளும், கரும்புள்ளிகளும், முகப்பரு வடுக்களும் குறைகின்றன. விரைவில் பலன் பெற, இதை குறைந்தது வாரம் இரண்டு முறை செய்ய வேண்டும்.

Related posts

தோல்களிலுள்ள அழுக்கை நீக்கணுமா?

nathan

சருமத்திற்கு தேவையான புரோட்டீன்கள் கிடைக்க இத செய்யுங்கள்!…

sangika

முகத்தின் பொலிவைக் கெடுக்கும் கருவளையம்!…

sangika

உங்கள் சருமத்தை பாதிக்கும் மோசமான அழகுப் பொருட்கள்

nathan

விஜய் மற்றும் தோனியின் திடீர் சந்திப்பு! ரசிகர்கள் செய்த காரியம்

nathan

பெண்கள் தனியாக சுற்றுலா செல்லும் போது செய்யக்கூடாதவை!…

sangika

உங்களுக்கு தெரியுமா கருவளையங்களை போக்க மேக்கப் மட்டும் போதாது..! இதை முயன்று பாருங்கள்!

nathan

பதற வைக்கும் தகவல்! குழந்தை இல்லாததால் சகோதரனிடம் மனைவியை சீரழிக்கவிட்டு கணவனே வீடியோ எடுத்த அவலம்!

nathan

இந்துப்பு சரும பராமரிப்பில் அழகை மேம்படுத்த பயன்படும்!

nathan