25.9 C
Chennai
Thursday, Aug 14, 2025
More benefits of red guava SECVPF
அழகு குறிப்புகள்ஆண்களுக்கு

அதிக நாட்கள் அழகாவும் இளமையாகவும் ஆண்கள் இருக்க கொய்யா பழம்….தெரிஞ்சிக்கங்க…

மனிதனாக பிறந்த பலருக்கும் நீண்ட நாட்கள் இளமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க தானே செய்யும். அதிக நாட்கள் அழகாவும் இளமையாகவும் ஆண்கள் இருக்க கொய்யா பழம் உதவுகிறது. கொய்யாவின் மருத்துவ குணம் நம் அனைவருக்குமே நன்றாக தெரியும்.கொய்யாவின் சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இந்த கொய்யாவை முக அழகிற்கும் பயன்படுத்தலாமாம். அது எவ்வாறு என்பதை இனி தெரிந்து கொண்டு பயன் பெறுவோம்.

சுவைமிக்க கொய்யா..! கொய்யவின் சுவைக்கு ஏற்றது போன்றே அதன் மகத்துவமும் அதிகம் உள்ளது. கொய்யாவை நாம் சாப்பிடவும், முகத்தில் பூசி கொள்ளவும் பயன்படுத்தலாம். இதனால் முக அழகு மற்றும் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். இந்த பழத்தில் ஏரளமான சத்துக்கள் உள்ளன. அவை அனைத்தும் உங்களை அழகாவும் இளமையாகவும் வைத்து கொள்ள உதவும்.

More benefits of red guava SECVPF
சத்துக்கள் நிறைந்த கொய்யா..! கொய்யாவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள், தாது பொருட்கள், வைட்டமின்கள் உள்ளன. குறிப்பாக வைட்டமின் சி, வைட்டமின் எ, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால் தான் கொய்யாவை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இளமையான முகத்தை பெற பார்ப்பதற்கு 20 வயது இளைஞனை போன்று தோற்றம் அளிக்க வேண்டும் என நினைத்தால் உங்களுக்கு இந்த குறிப்பு அற்புதமாக உதவும். தேவையானவை :- வாழைப்பழம் 1/2 கொய்யா பழம் 1/2 தேன் 1 ஸ்பூன்

செய்முறை :- கொய்யா மற்றும் வாழை பழத்தை சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும். பிறகு இந்த பேஸ்டுடன் தேன் சேர்த்து கலந்து கொண்டு, முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 30 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் முகம் இளமை பெறும்.

சுருக்கங்கள் மறைய முகத்தை வயதானவராக காட்டுவதே இந்த சுருக்கங்கள் தான். உங்களின் முகத்தில் உள்ள சுருக்கங்களை மறைய செய்ய இந்த குறிப்பு போதும். தேவையானவை :- முட்டை வெள்ளை கரு 1 கொய்யா பழம் பாதி

செய்முறை :- முதலில் வெள்ளை கருவை நன்கு அடித்து கொள்ள வேண்டும். பிறகு, கொய்யாவை அரைத்து கொள்ளவும். அடுத்து இந்த இரண்டையும் சேர்த்து கலக்கி முகத்தில் பூசி மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு செய்வதால் முகத்தின் சுருக்கங்கள் மறைந்து இளமையாக மாறும்.

முகப்பருக்களை ஒழிக்க பருக்கள் தான் நமது முகத்திற்கு எதிரி. இதனை முற்றிலுமாக ஒழிக்க இந்த குறிப்பு பயன்படும். தேவையானவை :- கொய்யா இலைகள் 10 வேப்பிலை இலைகள் 10 மஞ்சள் சிறிது

செய்முறை :- பருக்களை விரைவில் மறைய வைக்க, முதலில் இந்த கொய்யா மற்றும் வேம்பு இலைகளை நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் மஞ்சள் சேர்த்து முகத்தில் பூசி வந்தால் பருக்கள் காணாமல் போய்விடும்.

கருமையை நீக்க முகத்தில் உள்ள கருமையை நீக்க பல வகையான வைத்தி பொருட்கள் இருந்தாலும் இந்த கொய்யா வைத்தியம் அற்புதமாக வேலை செய்கிறது. இதற்கு தேவையானவை… கொய்யா பழம் 1/2 ஓட்ஸ் 2 ஸ்பூன் தேன் 1 ஸ்பூன்

செய்முறை :- முதலில் ஓட்ஸ் மற்றும் கொய்யாவை சேர்த்து கொண்டு நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் தேன் சேர்த்து முகத்தில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள கருமையான நிறம் நீங்கி வெண்மையான நிறமாக மாறும். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் அழகிற்கும் உதவுங்கள்.

Related posts

அடேங்கப்பா! உருளைக்கிழங்கு கூட சருமத்தை பாதுகாக்கிறதா..?

nathan

இதனை தினமும் செய்து வந்தால், முகத்தில் சேரும் அழுக்குகள் உடனே நீங்கும்.

nathan

சரும வறட்சியைத் போக்கும் இயற்கை லோசன்கள்

nathan

வைரல் வீடியோ!செல் ஃபோனை திருடி சென்ற நபரை டிராஃபிக்கில் துறத்தி, பாய்ந்து பிடித்த காவலர்

nathan

ஆல்யா மானசா சஞ்சீவ் வீட்டில் விசேஷம்! நீங்களே பாருங்க.!

nathan

பொலிவான சருமத்தை எளிதில் பெற – Ingredients for a clear skin

nathan

இளம் வயதில் முகத்தில் சுருக்கம்: இதோ சில குறிப்புகள் உங்களுக்கு!

nathan

கழுத்தில் தெரியும் உங்கள் வயது

nathan

லவங்கப் பட்டை கொண்டு தயாரிக்கும் மாஸ்க் பற்றி கேள்விப்பட்டதுண்டா? எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

sangika