முருங்கைக்கீரை தான் கீரைகளிலேயே முதன்மையான இடத்தைப் பிடிப்பது. இதில் ஏராளமான அளவு இரும்புச்சத்து நிறைந்திருப்பது நம் அனைவருக்குமே தெரிந்தது தான். ஆனால் முருங்கைக்கீரையால் தொப்பையைக் குறைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
முருங்கைக்கீரையை பவுடராகவும் கேப்சூல் வடிவிலும் தற்போது மாற்றி விற்கிறார்கள். முருங்கைக்கீரையில் உள்ள ரைபோஃபேலாவின் என்னும் பொருள் உடலின் சர்க்கரை அளவையும் கொழுப்பின் அளவையும் கட்டுப்படுத்துகிறது.
பாலூட்டும் தாய்மார்கள் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டிய கீரைகளில் ஒன்று முருங்கைக்கீரை. இதிலுள்ள கால்சியம் பால் சுரப்பதை அதிகரிக்கிறது.
தொப்பையைக் குறைக்கும் முருங்கைக்கீரை ஜூஸ் தயாரிக்கும் முறை இதோ…
ஒரு கால் கப் முருங்கைக்கீரையை எடுத்துக் கொண்டு ஒரு கப் தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு நன்கு அரைத்து வடிகட்டி, அதில் ஒரு ஸ்பூன் தேனும் அரை எலுமிச்சையின் ஜூஸ் சேர்த்து கலந்தால் முருங்கைக்கீரை ஜூஸ் ரெடி.
இதை காலையில் வெறும் வயிற்றிலோ அல்லது சாப்பிட்ட பின்னோ குடிக்கலாம். அதேபோல் இரவு சாப்பிட்ட பின் தூங்கச் செல்லும்முன் ஒரு கிளாஸ் குடித்து வரலாம்.
தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்தபின் உங்கள் தொப்பையைக் கொஞ்சம் குனிந்து பாருங்கள். அது காணாமல் போயிருக்கும்.