ஆண்களுக்குஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

தாம்பத்திய உறவில் ஏற்படும் பிரச்சனைகளை போக்க இத செய்யுங்கள்!…

தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல் என பல பெயர்களில் அழைக்கப்படும் மூலிகை, வெற்றிலை. கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை என சில வகைகள் உள்ளன. இது, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம்கொண்டது.

இதில் கரோட்டின், தயாமின், ரிபோஃபிளேவின், வைட்டமின் சி சத்துகள் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சவிக்கால் (Chavicol) என்ற வேதிப் பொருளும் இருக்கிறது.


இளம் வெற்றிலையை மட்டுமே மருந்தாகப் பயன்படுத்த வேண்டும். காம்பு, நரம்புகளை நீக்கிவிட்டுப் பயன்படுத்தினால், அதன் மருத்துவ குணங்கள் முழுமையாகக் கிடைக்கும்.

வெற்றிலையுடன் மிளகு சேர்த்து மென்றால், அது நார்ச்சத்தாகி உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றும்; உடலில் தேங்கியிருக்கும் கெட்ட நீரை அகற்றும்; மலச்சிக்கல் கோளாறு நீங்கும்.

வெற்றிலையை மென்றால், உமிழ்நீர் நன்றாகச் சுரந்து பசி உண்டாகும். இரண்டு டீஸ்பூன் வெற்றிலைச் சாற்றுடன் அரை டீஸ்பூன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், நரம்புகளுக்கு பலம் கிடைக்கும்; தொடர்ந்து சாப்பிட்டால், தாம்பத்யக் குறைபாடுகள் நீங்கும்.

வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, கஸ்தூரி, ஏலக்காய், லவங்கம், பாதாம், முந்திரி, திராட்சை, குல்கந்து சேர்த்து இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட்டால் ரத்தம் ஊறும்.

வெற்றிலைச் சாற்றுடன் தேவையான அளவு நீர், பால் சேர்த்துப் பருகினால் சிறுநீர் நன்றாகப் பிரியும்.

கடுகு எண்ணெயில் வெற்றிலையைப் போட்டு சூடுபடுத்தி (பொறுக்கும் சூட்டில்) மார்பில் கட்டி வந்தால் மூச்சுத்திணறல், இருமல் கட்டுப்படும்.

வெற்றிலைச் சாற்றுடன் தேன் சேர்த்துக் கொடுத்தால், குழந்தைகளின் சளி, இருமல் தீரும்.

வெற்றிலையில் ஆமணக்கு எண்ணெயைத் தடவி, தீயில் வாட்டி, கட்டிகளின் மீது வைத்துக் கட்டினால், உடைந்து சீழ் வெளியேறும். இதை இரவில் செய்வது நல்லது.

Related posts

குழந்தைகளை மொபைலுக்கு அடிமை ஆக்காதீர்கள்.

nathan

அமைதி தரும் ஆழ்நிலை தியானம்!…

nathan

சிறந்த எடை இழப்பதற்கான முதல் 10 இடங்கள் பிடித்த கிரீம்கள்:

nathan

அமர்ந்து வேலைசெய்பவர்கள் கட்டாயம் இத படிங்க!

sangika

கை கால் குடைச்சல் வர காரணங்கள் தெரியுமா?

nathan

உடலில் இப்படி அறிகுறிகளை தென்பட்டால் அலட்சியப்படுத்தாதீர்கள்…!கட்டாயம் இதை படியுங்கள்

nathan

இந்த 5 ராசிக்காரங்க அசைக்க முடியாத மனவலிமை உள்ளவங்க…

nathan

பிரசவத்திற்கு பின் இரத்தசோகை ஏற்படுவது ஏன்?…

nathan

உங்களுக்கு தெரியுமா மணத்தக்காளி கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan