28.1 C
Chennai
Saturday, Nov 16, 2024
madulai
ஆண்களுக்குஅழகு குறிப்புகள்ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

இதை இவ்வாறு சாப்பிட்டால் இயற்கை வயாகரவாகவே செயல்படும்!…

பொதுவாக சிவப்பு நிறம் கொண்ட பழங்கள் அனைத்துமே எண்ணற்ற பயன்களை தன்னுள் ஒளித்து வைத்திருக்கும். அதிலும் மாதுளை என்றால் “முத்துக்களின் ராணி” என்கிற சிறப்பு பட்டத்துடனே இருக்கும். எண்ணில் அடங்காத நன்மைகள் இந்த மாதுளையில் உள்ளது. மாதுளையை தினமும் சாப்பிட்டால் பலவித நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

ஆனால், மாதுளையை சாப்பிட கூடிய நேரமும், சாப்பிட கூடிய விதமும் மிக முக்கியம். வெறும் மாதுளையை சாப்பிடுவதை விட வேறு சில உணவு பொருட்களோடு சேர்த்து சில குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட்டால் இதன் பலன் பல மடங்காக அதிகரிக்கும் என அண்மைய ஆய்வுகள் கூறியுள்ளது.

madulai

சிவப்பு நிறம்- சிறந்த நிறம்..!

மற்ற பழ வகைகளை காட்டிலும் சிவப்பு நிற பழங்கள் ஏராளமான நன்மைகளை கொண்டுள்ளது. தினமும் சிவப்பு நிற பழங்களை சாப்பிட்டு வந்தால் நோய்கள் உங்களை அண்டாது. குறிப்பாக மாதுளை, இவற்றில் தனித்துவம் பெற்றது.

இதன் ஒவ்வொரு சிவப்பு முத்துகளிலும் வித விதமான பயன்கள் உள்ளன.

பழமும் நேரமும்..?

ஒவ்வொரு பழத்திற்கும் ஒரு தனி தன்மை உள்ளன. அதே போன்று பழங்களை சாப்பிட கூடிய நேரமும் மாறுபடும். பொதுவாகவே காலையில் பழங்களை சாப்பிடுவது மிக சிறந்தது.

இது மற்ற நேரங்களை காட்டிலும் மிக எளிமையாக செரிக்க வைத்து இவற்றின் பலன்களை முழுமையாக கிடைக்கும்படி செய்கின்றன.

மாதுளையும் இரவும்..!

பொதுவாகவே எந்த பழத்தையும் தூங்குவதற்கு முன்பு சாப்பிடுவது நல்லதல்ல. ஏனெனில், பழங்கள் சர்க்கரையை அதிகம் கொண்டவை.

எனவே இரவில் சாப்பிட்டால் அவை ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பதோடு, தூக்கமின்மை, செரிமான கோளாறையும் ஏற்படுத்தும். இது மாதுளைக்கு சற்று அதிகமாகவே பொருந்தும்.

ஆண்களின் நண்பன்..!

மாதுளை பழத்தை இப்படி ஜுஸ் போன்று செய்து சாப்பிட்டால் இயற்கை வயாகரவாகவே செயல்படும்.

அத்துடன் ஆண்களுக்கு உண்டாக்கும் பிறப்புறுப்பு புற்றுநோயில் இருந்தும் காத்து, விறைப்பு தன்மையையும் குணப்படுத்தும்.

இதற்கு தேவையானவை…

கேரட் 3

ஆப்பிள் 1

மாதுளை 1

தயாரிப்பு முறை…

முதலில் மூன்றையும் தனித்தனியாக ஜுஸ் போன்று தயாரித்து வைத்து கொள்ளவும். அடுத்து இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொண்டு குடிக்கலாம்.

இதனை காலை உணவிற்கு முன்பாக சாப்பிடுவது சிறந்தது.

ஆரஞ்சும் மாதுளையும்..!

இந்த ஆரஞ்சு நிற பழத்தையும், சிவப்பு நிற பழத்தையும் சேர்த்து சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் உங்களுக்கு கிடைக்குமாம்.

குறிப்பாக உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி திறன் இரட்டிப்பாகும். அத்துடன் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

ஆரஞ்சு பழம் 2

மாதுளை 1

தயாரிப்பு முறை…

முதலில் மாதுளையை உரித்து அதன் முத்துக்களை நன்கு அடுத்து கொள்ள வேண்டும். பிறகு ஆரஞ்சு பழத்தின் சாற்றை பிழிந்து எடுத்து கொள்ளவும்.

இறுதியாக இரண்டையும் சேர்த்து குடிக்கலாம். இதில் எந்தவித சர்க்கரையையும் சேர்க்க தேவையில்லை.

காலை உணவாக…

நீங்கள் இப்படியும் இந்த மாதுளையை காலை உணவாக சாப்பிடலாம். இது பலவித நன்மைகளை உங்களுக்கு உண்டாக்கும்.

உடல் எடை குறைப்பு முதல் கொலஸ்ட்ரால் பிரச்சினை வரை அனைத்திற்கும் நல்ல தீர்வை தரும்.

தேவையானவை…

மாதுளை அரை கப் வெள்ளரிக்காய் 1

ஆலிவ் எண்ணெய் 2 ஸ்பூன்

கருப்பு மிளகு தூள் சிறிது

எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

செய்முறை :-

முதலில் வெள்ளரிக்காயை தோல் உரித்து நறுக்கி கொள்ளவும். அதன் பின் மாதுளையை சேர்த்து கொள்ளவும். சிறிது மிளகு தூள், ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும்.

இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து காலை உணவாக சாப்பிடலாம். இது உங்களுக்கு அதிக ஆரோக்கியத்தை தர கூடிய உணவு வகை.

எவ்வளவு குடிக்கலாம்..?

மாதுளையை ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்த பின்னர் சாப்பிடுவது சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும், தினமும் 1 கிளாஸ் மாதுளை ஜுஸ் குடிப்பது நல்லது. எதையும் அளவுடன் சாப்பிடுவதே உடலுக்கு தீங்கை தராது.

மாதுளை எப்படி..?

மாதுளையை மேற்சொன்ன குறிப்புகள் போன்று தயாரித்து சாப்பிடலாம். அதுவும் மற்ற வேளைகளை காட்டிலும் காலை உணவாக சாப்பிடுவது அதிக பலனை உங்களுக்கு தரும்.

மேலும், வெறும் மாதுளையையும் காலை உணவில் சேர்த்து சாப்பிடலாம்.

Related posts

அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் 10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்.. மாரடைப்பு குறித்த விழிப்புணர்வு

nathan

முக அழகு குறிப்புகள்: சருமத்தை மென்மையாக்க இரவில் தேன் செய்யும் மாயம் இது

nathan

உட்கார்ந்தபடியே அதிக நேரம் வேலை பார்ப்பவரா நீங்கள்? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

குடற்புழுவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க இதை செய்யுங்கள்!

nathan

அந்த இடத்தில் அரிப்பா? தடுக்கும் எளிய வீட்டு வைத்தியம்

nathan

அற்புதமான அழகு குறிப்புகள்…!! சரும நிறத்தை மேம்படுத்த

nathan

நடிகை கண்ணீர் – திருப்பதி கோவிலில் அவமானம் படுத்தப்பட்டேன்

nathan

முக அழகை பொலிவாக வைத்து கொள்ள…..

sangika

முடியின் பராமரிப்பிற்கு தக்காளி

sangika