28.1 C
Chennai
Saturday, Nov 16, 2024
veg rice khichdi
அழகு குறிப்புகள்

ருசியான காராமணி பூண்டு பிரியாணி எப்படிச் செய்வது?

தேவையானப்பொருட்கள்:

பச்சரிசி – 2 கப்,
உலர்ந்த காராமணி – கால் கப் (ஊறவைக்கவும்),
நீளமான பச்சை காராமணி – 50 கிராம்,
சின்ன வெங்காயம் – 10,
பூண்டு – 10 பல்,
தக்காளி – ஒன்று,
குடமிளகாய் – பாதியளவு,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி – சிறிய துண்டு,
கொத்தமல்லி தழை – சிறிதளவு,
உப்பு – தேவைக்கேற்ப.

veg rice khichdi

செய்முறை:

வெறும் வாணலியில் பச்சரிசியை வறுத்து வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, குடமிளகாயை வதக்கி, அத்துடன் ஒரு அங்குலத் துண்டுகளாக நறுக்கிய பச்சைக் காராமணியை சேர்த்து வதக்கவும்.

இதனுடன் மிளகாய்த்தூளையும் சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளி, தோல் சீவி நறுக்கிய இஞ்சியை சேர்க்கவும். இதில் மூன்றரை கப் நீர் விட்டு உப்பு, அரிசி, உலர்ந்த காராமணி சேர்த்து குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். ஆவி வெளியேறியதும் கொத்த மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

தேவைப்பட்டால், காய்கறிகளை வதக்கும்போது ஒரு டீஸ்பூன் சீரகம் அல்லது அரை டீஸ்பூன் சோம்பு சேர்த்து வதக்கலாம்.

Related posts

சரும சுருக்கத்தை போக்கும் டைட்னிங் பேஷியல்

nathan

சாப்பிட்ட உடனே இவற்றை செய்கிறீர்களா?

sangika

அழகு குறிப்புகள் | பன்னீரின் நன்மைகள்

nathan

எந்த சேலைக்கு எந்த மாதிரி ஜாக்கெட் அணிந்தால் அசத்தலாக இருக்கும் தெரியுமா?

nathan

மாமியாரின் தகாத செயல்.. கண்டித்த மருமகளுக்கு நேர்ந்த கொடுமை;

nathan

முகத்தில் பருக்கள் வராமல் இருக்க இந்த குறிப்பு நன்கு உதவும்…..

sangika

நடிகை பூர்ணாவுக்கு திருமணம் : புகைப்படங்கள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… பிரசவ வலி: புரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்

nathan

அழகு குறிப்புகள்:அழகு தரும் பூ…

nathan