24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

இதயத்தைக் காக்கும் காளான்

இதயத்தைக் காக்கும் காளான்

தற்போது மக்கள் விரும்பி உண்ணத் தொடங்கியுள்ள காளான், பல சத்துகளையும், மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக இதில்,  மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான வைட்டமின் ‘டி’ அதிகம் உள்ளது.காளான் ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. அதிக ரத்த அழுத்தத்தையும், ரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பையும் தடுக்கிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளான் பெரும் பங்கு வகிக்கிறது. மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

காக்காய் வலிப்பு, மூளை நோய், வலிமைக் குறைவு, மஞ்சள்காமாலை, மூட்டு வலி, தலையில் நீர்கோர்த்தல் உள்ளிட்ட பல நோய்களை காளான் கட்டுப்படுத்துகிறது. அவ்வப்போது காளான் சூப் பருகுவதன் மூலம் பெண்களுக்கு கருப்பைப் பிரச்சினைகள் வருவது தடுக்கப்படும். தீராத காய்ச்சலுக்கு விரைவில் நல்ல பலனை தரும்.

மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும். காளான் சூப் தயாரிப்பதைப் போல காளான் குழம்பும் வைக்கலாம். இதுவும் நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும். சர்க்கரை நோயாளிகள் காளான் குழம்பு சாப்பிடுவது மிகவும் நல்லது. தாம்பத்திய உறவு பிரச்சினை, முதுமைத் தளர்வு, காய்ச்சல், பாக்டீரியா நோய்கள், நரம்பு வலி உள்ளிட்ட நோய்கள் குணமடையும்.

காளான் குழம்பை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்துவிடலாம். இதயத்தைக் காத்துக்கொள்ள விரும்புபவர்கள் காளான் மீது கவனம் வைக்கலாம்!

Related posts

பெண்களுக்கு வலிமை தரும் கருப்பு உளுந்து!!

nathan

அழுக்குகளைப் போக்க பிராணாயாமத்தின் மூன்று நிலைகள்!…

nathan

மாம்பழம் அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா? தெரிஞ்சிக்கங்க…

nathan

சுவையான சத்து மாவு கஞ்சி

nathan

கோடை வெயிலுக்கு குளுமை தரும் மோர்

nathan

அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளால் புற்றுநோய் அபாயம்

nathan

படிக்கத் தவறாதீர்கள்! 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள்

nathan

உடல் எடையை குறைக்க சிறந்த வழிகள்…..

sangika

தெரிஞ்சிக்கங்க…இந்த உணவு மற்றும் பானங்களை சாப்பிட்டால் உங்களுக்கு கடுமையான வயிற்று வலி வருமாம்…

nathan