28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
pomegranate
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது….

பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயாகராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது.

ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம்.

ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும், ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்து காலை மாலை பசும்பாலில் 4 கிராம் சூரணத்தை காய்ச்சி குடிக்கலாம். இது நரம்புத்தளர்ச்சியை போக்கும்.

மாதுளம் பூ…….

* மாதுளம் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் மாதுளம் பூக்களும் பலவித நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது.சளி, இருமல்,மூச்சிரைப்பு உள்ளிட்ட நோய்களுக்கு எளிய மருந்தாக உள்ளது.

pomegranate

* தினமும் காலையில் நான்கு மாதுளம் பூக்களை மென்று தின்று பால் குடித்து வர ரத்தம் சுத்தமடையும்.

மாதுளம் பூவை பசும் பாலில் வேகவைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத்தளர்ச்சி நீங்கும். தாதுபலம் பெறும்.

* மாதுளம் பூச்சாறு 300 கிராம், பசுநெய் 200 கிராம் சேர்த்து அடுப்பில் காய்ச்சவும். பின் இறக்கி ஆறியபின் அகலமான வாய் உள்ள பாட்டிலில் எடுத்து வைக்கவும்.

வேளைக்கு ஒரு ஸ்பூன் எடுத்து காலை, மாலை தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.

* மாதுளம் பூக்களைச் சேகரித்து வெயிலில் காயவைத்து, வேலம் பிசின் 30 கிராம் எடுத்து வெயிலில் காயவைத்து இரண்டையும் உரலில் போட்டு இடித்து மாவு சல்லடையில் சலித்து வாயகன்ற கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும்.

காலை, மாலை ஒரு தேக்கரண்டியளவு தூளுடன் அதே அளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.

* ஐந்து மாதுளம் பூக்களை அம்மியில் வைத்து மைய அரைத்து அரை டம்ளர் எருமைத் தயிரில் கலந்து காலை ஒருவேளை மட்டும் தொடர்ந்து ஐந்து நாட்கள் குடித்து வர சீத பேதி குணமடையும்.

முருங்கையின் மகத்துவம்…….

* பாலியல் குறைபாடு தொடர்பான மருத்துவத்தில் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது.

* முருங்கைப்பூவின் பொடியை தேனில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

* முருங்கை பூ சிறுநீர்ப் போக்கிகளை தூண்டு பவை, பித்த நீர் சுரப்பினை அதிகரிக்கும்.

முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில் வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

நரம்புகள் பலப்படும். உடல் வலுப்பெறும் உடல் சூடு தணியும்.இதை இயற்கையின் வயாகரா என்று கூறலாம்.

முருங்கை கீரை, முருங்கை பூ இரண்டையும் சம அளவில் சேர்த்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்கடலையை வறுத்துப் பொடி செய்து தூவி உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆண்மை தன்மை அதிரிக்கும்.

கீரையும், பூவையும் சமஅளவில் சேர்த்து, வேகவைத்து கடைந்து குழம்பாகவும் உபயோகிக்கலாம்.

Related posts

யோகப் பயிற்சியில் முன்னேற, சில விஷயங்கள்…

sangika

வயிற்றில் புண் வராமல் தடுக்க எளிய வழிகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளில் இதையெல்லாம் தவறிக்கூட செய்திடாதீங்க…. ஆபத்து ஏற்படுமாம்

nathan

ஹெல்த் ஸ்பெஷல்… சிறுநீரக கற்களுக்கு தீர்வு தரும் அன்னாசி பழம்!

nathan

இந்த பொருட்களை உட்கொண்டாலே மலச்சிக்கல் விரைவில் குணமாகும் என்பது உங்களுக்கு தெரியுமா?

nathan

12ராசிக்கும் ஏற்படப்போகும் யோகம் என்ன?ஜூன் மாதத்தில் மாறும் கிரகங்களின் மாற்றம்…

nathan

எல்லா நலமும் தரும் நடைப்பயிற்சி

nathan

உங்க ஃபேவரட் ஹீரோயினோட வெயிட் குறைக்கிற சீக்ரட் தெரிஞ்சிக்கணுமா?

nathan

சுயிங்கம் மென்றால்?

nathan