25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
coffee
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

வயிற்றில் செய்கின்ற எந்தெந்த செயல்கள் நமக்கு தீங்கை தரும் என்பதை இனி அறிந்து கொள்வோம்….

ஒரு சில செயல்களை இந்த நேரத்தில் தான் செய்ய வேண்டும் என்கிற வரையறை இருக்கிறது. அதனை மீறி செய்வதால் பல விளைவுகள் நமது உடலுக்கு ஏற்படுகிறது. உடலின் தன்மையை பொருத்தே இவை நமக்கு ஆபத்தை ஏற்படுத்துமா..? இல்லையா..? என்பது தெரியும்.

வெறும் வயிற்றில் இவற்றையெல்லாம் செய்யாதீர்கள்..! மீறி செய்தால் மரணம் கூட நேரலாம்..!

நாம் வெறும் வயிற்றில் செய்கின்ற ஒரு சில செயல்கள் நமக்கு பல வித ஆபத்துகளை தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இந்த செயல்கள் ஒவ்வொரு உறுப்புகளையும் பாதிக்க செய்து மரணத்தை கூட ஏற்படுத்தும்.

நாம் வெறும் வயிற்றில் செய்கின்ற எந்தெந்த செயல்கள் நமக்கு தீங்கை தரும் என்பதை இனி அறிந்து கொள்வோம்.

coffee

ஏன் செய்ய கூடாது..?
காலையில் எழுந்தவுடன் நாம் எதையும் சாப்பிடாமல் இருக்கும் பட்சத்தில் பல வித செயல்கள் நம்மை அறியாமலே செய்வோம்.

இவை எந்த வித பாதிப்பை நமக்கு தரும் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். வெறும் வயிற்றில் ஒரு சில விஷயங்களை செய்தாலும், அல்லது சாப்பிட்டாலும் உறுப்புகளின் செயல்திறன் மாறுதல் அடையும்.

டீயா..? காப்பியா..?

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. ஆனால், வெறும் வயிற்றில் இவற்றை குடித்தால், அமில தன்மை வயிற்றில் அதிகரித்து செரிமான பிரச்சினை, மலச்சிக்கல், வாந்தி ஆகிய பின்விளைவுகளை ஏற்படும்.

எனவே, இதற்கு பதிலாக டீ அல்லது காபியுடன் ஏதேனும் சேர்த்து சாப்பிடுவது சற்று நல்லது.

உடற்பயிற்சி செய்யலாமா..?

உடற்பயிற்சியை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் செய்வதால் உடல் எடை சட்டென குறைந்து விடும் என பலர் எண்ணுகின்றனர். ஆனால், இது முற்றிலும் தவறான கருத்தாகும்.

இந்த பயிற்சி கொழுப்புகளை குறைக்காமல் தசைகளையே குறைக்கும். ஆதலால், வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யாமல் ஏதேனும் சிறிய அளவில் சாப்பிட்டு விட்டு பயிற்சியை தொடங்குங்கள்.

ஜிவிங் கம் வேண்டாமே..!

பலருக்கு ஜீவிங்கம் சாப்பிடும் பழக்கம் இருக்கும். இதனை மற்ற நேரத்தில் சாப்பிட்டால் ஏற்படும் பாதிப்பை விட, வெறும் வயிற்றில் காலை நேரத்தில் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் தான் அதிகம்.

வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால் வாயு கோளாறு, அமில தன்மை அதிகரித்தல் போன்ற பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றான வர தொடங்கும்.

Related posts

சுப்பரான தாமரை விதை பாயாசம்

nathan

நீங்கள் இருட்டான அறையில் தூங்குபவரா ? அப்ப இத படியுங்க!

nathan

கர்ப்ப காலத்தில் பாலுடன் மஞ்சள் சேர்த்து குடிக்கலாமா?…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கும் தாயுக்கும் எவ்வளவு முக்கியம் எனத் தெரியுமா

nathan

ஆரோக்கியத்திற்கு தீங்காகும் அழகு சாதனப் பொருட்கள்!

nathan

சமையல் குறிப்பு டிப்ஸ்

nathan

உங்களுடைய 4 பழக்கவழக்கத்தால் அனாவசியமாக ஏற்படும் தொப்பை:

nathan

90% கேன் வாட்டர் அபாயமானது!தெரிஞ்சிக்கங்க…

nathan

சர்க்கரை நோய் உள்ள பெண்கள் கருத்தரிப்பது கடினமா?

nathan