எலுமிச்சை இலை ஊறிய மோர்-ஐ சோற்றில் பிசைந்து சாப்பிட்டு வந்தால்…
எலுமிச்சை இல்லாத இடமே இல்லை எனலாம். அந்தளவுக்கு மருத்துவம் மட்டுமல்லாமல் ஆன்மீகம் சார்ந்த விஷயங்களிலும் இந்த எலுமிச்சை பயன்பட்டு வருகிறது. எலுமிச்சை காய், பழம் மட்டு மல்ல அதன் இலையில்கூட மருத்துவ பண்புகள் உண்டு.
ஆகவே இந்த எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து, அந்த மோரை சோற்றில் பிசைந்து சாப்பிடுங்கள்.
உடலில் தேவைக்கு அதிகமாக மலிந்துகிடக்கும் பித்தத்தையும் அதனால் உண்டாகும் உஷ்ணத்தையும் போக்கி, உடலை மிதமான வெப்பநிலையில் வைத்திருக்கும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம்.
மருத்துவரின் ஆலோசனையுடன் உட்கொள்ளவும்.