அஞ்சலி முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் இதயத் தசைகளுக்கு வலு கிடைக்கிறது. படபடப்பு நீங்கி இதயத் துடிப்புச் சீராகிறது. இந்து முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
செய்முறை :
தரையில் நின்றுகொண்டோ, சப்பணம் இட்டு அமர்ந்தோ செய்யலாம். வணக்கம் வைப்பதற்கு கைகளை எப்படி வைக்கிறோமோ அதுதான் அஞ்சலி முத்திரை. அதாவது, கைகளானது மேலே, கீழே என ஏற்ற இறக்கமாக இருக்கக் கூடாது. இரண்டு கைகளுக்கும் நடுவே இடைவெளியும் இருக்கக் கூடாது. சரியான அளவில் சரியான அழுத்தத்தில் இருக்க வேண்டும்.
10 – 15 நிமிடங்கள் வரை ஒரு நாளைக்கு இரண்டு முதல் ஐந்து முறை செய்யலாம்.
பலன்கள் :
மூளையின் வலது மற்றும் இடதுபுறச் செயல்பாட்டை சமன் செய்கிறது. அமைதி, தெளிவு கிடைக்கும். விரல்கள், கைகள், மணிக்கட்டு, முழங்கை வலுப்பெறுகிறது. உடலுக்கு சக்தி மற்றும் பலம் கிடைக்கிறது.
இதயத் தசைகளுக்கு வலு கிடைக்கிறது. படபடப்பு நீங்கி இதயத் துடிப்புச் சீராகிறது. மனப்பிரச்சனைகள் மற்றும் உடல் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.
இந்த முத்திரையை நமது இதயத்திற்கு நேராக வைத்து செய்தால் நமது மனம் அமைதி பெறும். நமது மூளையின் இருபக்கமும் அதாவது வலது இடது பக்க மூளைகளும் அமைதி பெறும்.
விரல் நுனிகள் அழுத்தத்துடன் தொடுவதால் நமது உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது. இந்த முத்திரை பயிற்சியால் நமது உறவினர்களிடம் மகிழ்ச்சியான உறவும் நல்ல நண்பர்களின் தொடர்பும் அதிகரிக்கிறது.