27.2 C
Chennai
Sunday, Nov 24, 2024
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

முடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள்

24-1366784483-naturalshampooதலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் பல நேரத்தை செலவு செய்வது வழக்கமான ஒன்று தான். தலை முடியானது ஒருவருடைய அழகை நிர்ணயிக்க முக்கியமானதாகும். ஒரு வகையில் நாமும் கவரிமானைப் போலத் தான். எப்படி என்று கேட்குறீர்களா? பொதுவாக கவரிமான் தன் உடம்பில் இருந்து ஒரு முடி உதிர்ந்தாலும் உயிரை விடும் என்று சொல்வர். அதே போல் தான் நாமும். சொத்து, சுகம் பறிபோவதை விட, முடி பறிபோவதை நம்மால் தாங்கி கொள்ளவே முடியாது. அவ்வாறு முடி கொட்டுவதைப் பற்றியும், அதனை தடுப்பதை பற்றியும் கண்டிப்பாக அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

முடி கொட்டுதல் என்பது மிக இயல்பான நிகழ்வு. இதை அனுபவிக்கும் பலருக்கும் ஒரு பயம் தொற்றிக் கொண்டு, முடி கொட்டிய இடத்தை தலை வாரி மறைக்க முயல்வர். குளிக்கும் போது கழிந்த முடிச்சுருள்களை பார்க்கும் போதோ அல்லது தலை வாரும் போது சீப்புகளில் காணும் முடிச்சுருள்களை பார்க்கும் போதோ பலருக்கும் மனச்சோர்வு ஏற்படுவது உண்டு. பல பேருக்கு முடி கொட்டுதல் என்பது ஒரு இயற்கையான செயல்பாடு என்பது தெரியாது. நாம் என்ன செய்தாலும் சரி, முடி கொட்டுவதை நிறுத்த முடியாது. ஆனால் சிறிது தடுக்கலாமே. ஆம், நாம் மனது வைத்தால் முடி கழியும் அளவை குறைக்க முடியும்.

சந்தையில் கிடைக்கும், முடி கொட்டுதலைத் தடுக்கும் பொருட்களை பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் ஏதேனும் உள்ளதா என்ற கேள்விகள் எப்போதும் இருக்கும். இதை மனதில் வைத்துக் கொண்டு, எதையும் பயன்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டாலும் வேகமாக முடி கழிந்து கொண்டிருப்பவர்களுக்கு அபாயம் நிற்கப் போவதில்லை. இதற்கு ஒரே நிவாரணம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை உபயோகிப்பதே. இப்படி பயன்படுத்துவது இயற்கை சார்ந்த பொருட்கள் என்பதால் பக்க விளைவுகள் பற்றிய கவலைகளை விட்டெறியலாம். தலையில் வானூர்தி இறங்கும் தளம் அமைப்பது, அதாங்க வழுக்கை விழுவதை தடுக்க சிறந்த ஒரே வழி இயற்கையான பாட்டி வைத்தியத்தை மேற்கொள்வதே. அதற்கு கீழ்கண்டவைகளை படித்து, தலை முடி கொட்டுவதை எவ்வாறு குறைக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

முடியை அலச வேண்டும்
எப்போதுமே தலை முடியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முடி கொட்டுதலுக்கு முக்கிய காரணமான பொடுகு மற்றும் அரிப்பிலிருந்து இது தடுக்கும். மேலும் தலை முடியின் வகையை பொறுத்து, அதற்கு தகுந்த ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்த வேண்டும்.

24 1366784384 mustardoil
கடுகு எண்ணெய்
ஒரு கப் கடுகு எண்ணையை எடுத்து நான்கு டீஸ்பூன் மருதாணி இலைகளுடன் கலக்கவும். இந்த கலவையை நன்கு கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி ஒரு குப்பியில் நிரப்பி வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெயை வைத்து, தலையை நன்கு மசாஜ் செய்து கொண்டால், முடி ஆரோக்கியத்தை பெரும்.

24 1366784401 fenugreek
வெந்தயம்
சில டீஸ்பூன் வெந்தயத்தை நன்கு அரைத்து, அதை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொள்ளவும். இந்த கரைசலை தலை முடியில் நன்கு தடவி, 40 நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின் தண்ணீரில் முடியை அலசி விட வேண்டூம். இதை தொடர்ந்து ஒரு மாத காலம் செய்து வந்தால் முடி கழிதல் குறையும்.

24 1366784417 hairmassage
மசாஜ்
முடியை குளிர்ந்த நீரில் அலசி, தலை முடியையும், ஸ்கால்ப்பையும் கைகளால் நன்கு கோதி விட்டு மசாஜ் செய்ய வேண்டும். இது தலையில் இரத்த ஓட்டத்தை தூண்டி முடி கொட்டுவதை தடுக்கும்.

24 1366784436 onion
வெங்காயம்
தலையில் வழுக்கை விழ ஆரம்பித்து விட்டதா? கவலையை விடுங்கள். பச்சை வெங்காயம் ஒன்றை எடுத்துக் கொண்டு, வழுக்கை விழும் இடத்தில், தோல் சிவக்கும் வரை தேய்த்து, பின்னர் அங்கே தேனை தடவினால், முடி வளர்ச்சிக்கு இந்த முறை ஒரு தூண்டுதலாக இருக்கும்.

24 1366784457 egg
முட்டை
முட்டையின் மஞ்சள் கரு மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அந்த கலவையை தலையில் தடவி மசாஜ் செய்தாலும் முடி கழிதல் குறையும். இந்த கலவை தலையில் நன்கு உட்காரும் வரை, சுமார் அரை மணி நேரத்துக்கு ஊற வைத்து, பின் தண்ணீரில் அலசி விடவும்.

24 1366784483 naturalshampoo
இயற்கை ஷாம்பு
5 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டீஸ்பூன் பாசிப்பயறு மாவை ஒன்றாக கலந்து, அதனை தலைக்கு தேய்த்து, ஊற வைத்து, நீரில் அலசினால், முடி கழிதல் நின்று, நன்கு ஆரோக்கியமாக வளரும்.

24 1366784510 coconutoil
தேங்காய் எண்ணெய்
ஒரு கப் தேங்காய் எண்ணெயை சூடேற்றி, காய வைத்த நெல்லிக்கனியை அதில் போட்டு, கொதிக்க விட்டு வடிகட்டி, அதனை ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் தலையிலும், தலை முடியிலும் நன்கு மசாஜ் செய்தால், முடி கொட்டுதலின் அளவு கண்டிப்பாக குறையும்.

24 1366784527 amlaandlemon
நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை சாறு
நெல்லிச்சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முடிக்கு தேய்த்து மசாஜ் செய்து குளித்தால், முடி உதிர்வை குறைக்கலாம். இது முடி வளர்வதற்கும் ஒரு சிறந்த தூண்டுகோலாக இருக்கும்.

24 1366784546 spinach
பசலைக்கீரை சாறு
தினமும் ஒரு கப் பசலைக்கீரை சாற்றை பருகினால் முடி கொட்டுவதை தவிர்க்கலாம்.

24 1366784566 coriander
கொத்தமல்லி
பச்சை கொத்தமல்லியை வாங்கி, அதை நன்றாக அரைத்து 1 கப் அளவு சாறு எடுத்து, முடியை நன்கு அலசுங்கள். அதுவும் ஒரு தீர்வே.

24 1366784596 coconutmilk
தேங்காய் பால்
தலையை தேங்காய் பாலால் அலசுவதும் கூட முடி கழிதலுக்கு உடனடி நிவாரணி.

Related posts

பட்டுப் போன்ற கூந்தல் கிடைக்க செம்பருத்தி மாஸ்க்!

nathan

முடி பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! செம்பருத்தி எண்ணெய் எப்படி தயாரிப்பது?

nathan

குளிரில் கொட்டுமா முடி?

nathan

கூந்தல் உடைவதைத் தடுக்கும் கற்றாழை தேங்காய் எண்ணெய்!

nathan

தலைமுடி வளர்ச்சிக்கு பூண்டு எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம் ?

nathan

முடி வெடிப்பைத் தடுக்கும் வீட்டு வைத்தியங்கள்

nathan

கூந்தல் உதிர்வை தடுக்கும் முட்டை மசாஜ்!

nathan

நரை முடி வர ஆரம்பித்துவிட்டதா?

nathan

கூந்தலைப் பராமரிக்க அருமையான வழிகள்!

nathan