தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு – கால் கிலோ,
பூண்டு – 10 பல்,
வெங்காயம் – 1
தக்காளி – 1,
கீறிய பச்சை மிளகாய் – 3,
புளி – நெல்லிக்காய் அளவு,
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன்,
கடலைப்பருப்பு, குழம்பு பொடி – தலா ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
செய்முறை:
உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை கரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பூண்டு, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக குழைய வெந்ததும் உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், குழம்பு பொடி சேர்த்து வதக்கி, கரைத்த புளியை ஊற்றி, உப்பு போட்டு, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.