24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
beetroots for pregnant women
ஆரோக்கியம்கர்ப்பிணி பெண்களுக்கு

பீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது

கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் இரத்தசோகை ஏற்படுவது தடுக்கப்படுவதோடு ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைத்து நல்ல கொழுப்பினை அதிகரிக்கிறது. beetroots for pregnant women

இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசியமானது. கர்ப்பினிகள் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் குழந்தையின் முதுகெழும்பு நன்றாக வளர்ச்சியடையும், குழந்தைக்கு நரம்பு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பு. இதனால் இரத்தசோகை ஏற்பட்டு பிரசவகாலத்தில் சிக்கலாகிவிடும். இதனை தடுக்க கர்பிணிகளுக்கு கொடுக்கும் உணவில் பீட்ரூட் அதிகம் சேர்த்துக் கொடுக்கவேண்டும். உற்சாகத்தை அதிகரிக்கும்: இது மனதிற்கு உற்சாகம் தரும் காய்கறி. சற்றே சோம்பலாகவோ, மன அழுத்தம் ஏற்படுவதுபோல உணர்ந்தாலோ பீட்ரூட் ஜூஸ் சாப்பிடலாம்.

இது மனதை உற்சாகப்படுத்தும், மகிழ்ச்சி ஏற்படும். இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண்களை பாதுகாக்கும். குழந்தைகளுக்கு கண்நோய் ஏற்படாமல் தடுக்கும். கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே கர்ப்பிணிகளுக்கு சாலட், ஜூஸ், சூப் போன்றவைகளை செய்தும் கொடுக்கலாம்.

Related posts

குழந்தையின் பார்வை திறனும், மூளையின் செயல்பாடுகளும் மேம்பட….

sangika

இந்த பயிற்சியை செய்து வருபவருக்கு வயாகரா போன்ற மருந்து தேவைப்படாது…

nathan

இந்த உப்பு கொண்டு உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.

nathan

ஒட்டியாணம் இளம் பெண்கள் அவசியம் அணிய வேண்டுமாம்!…

sangika

தொப்பையை குறைக்க சில புத்திசாலித்தனமான ஐடியாக்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…லாக்டவுன் நேரத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே உடற்பயிற்சி செய்வது எப்படி?

nathan

இந்த பாவங்களுக்கு இவ்வுலக வாழ்க்கை, மறுவுலக வாழ்க்கை இரண்டிலுமே தண்டனைகள் நிச்சயம்!…

sangika

நீரிழிவு ஆபத்தை உண்டாக்கும் ஆரஞ்சு பழரசத்தை தவிர்ப்பீர்

nathan

பிரசவத்தில் போது பெண்கள் மரணமடைவதற்கான பொதுவான காரணங்கள்

nathan