மருத்துவ குறிப்பு

இதோ இதய நலனை அதிகரிக்க செய்யும் எளிய ஆயுர்வேத வழிமுறைகள்!

இந்நாட்களில் சரியான உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதால், உடல் பருமன் அதிகரிக்கிறது. உடலில் கொழுப்பு அதிகரிக்க, அதிகரிக்க, இதயத்தின் நலன் தொய்வடைந்து போகிறது. இந்தியாவில் நீரிழிவு மற்றும் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

எனவே, உங்கள் இதயத்தின் மீது நீங்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். கண்டிப்பாக இதற்கு எந்தவொரு ஆங்கில மருந்தும் நிரந்தர தீர்வளிக்காது. எனவே, இயற்கையான, ஆயுர்வேத முறைகளை பின்பற்றி இதயத்தின் வலிமையையும், ஆரோக்கியத்தையும் மேலோங்க செய்யுங்கள்.

ஆயுர்வேத வழிமுறை # 1 தினமும் ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தால் இதயத்தின் வலிமை அதிகரிக்கும்.

ஆயுர்வேத வழிமுறை # 2 அத்திப்பழத்தை காய வைத்து பொடியாக்கி ஒரு கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் வலுவிழந்த இதயம் ஆரோக்கியமடையும்.

ஆயுர்வேத வழிமுறை # 3 பேரிக்காய் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது இதய வலிமையை அதிகரித்தும் இதயத்தின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.

ஆயுர்வேத வழிமுறை # 4 48 நாட்கள் வெந்நீரில் தேன் மற்றும் துளசி இலை சாற்றை கலந்து குடித்து வந்தால், இதயம் வலிமை பெரும்.

ஆயுர்வேத வழிமுறை # 5 செம்பருத்தி பூவின் இலையை உலர்த்தி காயவைத்து பொடியாக்கி, அதனுடன் மருதம்பட்டை தூள் சேர்த்து, இவை இரண்டையும், சம அளவு எடுத்து பாலில் கலந்து பருகி வந்தால் இதயம் வலிமையடையும்.

ஆயுர்வேத வழிமுறை # 6 தூதுவளை காயை மோரில் ஊற வைத்து, பிறகு அதை வறுத்து உட்கொண்டு வந்தால், இதயத்தின் வலுவின்மை நீங்கி, நல்ல ஆரோக்கியம் அடையும்.

Related posts

கருப்பைவாய் புற்றுநோயை விரட்டும் மருந்து!

nathan

ஒரு ஸ்பூன் பப்பாளி விதை தினமும் சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

தெரிந்துகொள்வோமா? கர்ப்ப காலம் பற்றி இதுவரை நீங்கள் அறிந்திராத சில வியக்கத்தக்க உண்மைகள்!

nathan

ஆஸ்துமா பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கணுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா மூலம் நோய்க்கு வீட்டிலேயே செய்யும் இயற்கை மருந்து…

nathan

குண்டு ஆண்களை விரும்பும் பெண்கள்

nathan

தக்காளி காய்ச்சல் : அறிகுறி.. சிகிச்சை முறை.. தவிர்க்கும் முறை..

nathan

ஆபத்தான தலைவலிகள் ஏவை?

nathan

கரையான் அரிக்கும் மரபொருட்கள்: மாற்றுவழி என்ன?

nathan