25.5 C
Chennai
Tuesday, Jan 27, 2026
wheat rava chicken biryani. jpg
ஆரோக்கிய உணவு

ரவை சிக்கன் பிரியாணி

ஜீரக சம்பா, பாஸ்மதி அரிசியில் பிரியாணி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கோதுமை ரவையில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கோதுமை ரவை சிக்கன் பிரியாணி
தேவையான பொருட்கள் :

சிக்கன் – கால் கிலோ
கோதுமைக் குருணை – 2 கப்
நெய் – இரண்டரை டேபிள்ஸ்பூன் + ஒரு டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
பட்டை – ஒன்று
கிராம்பு – 2
ஏலக்காய் – 3
பிரிஞ்சி இலை – ஒன்று
சின்னவெங்காயம் – அரை கைப்பிடி
பெரியவெங்காயம் – ஒன்று
இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன்
பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
பச்சைமிளகாய் – 4 (கீறியது)
தக்காளி – 2
புதினா இலை – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – கால் டீஸ்பூன்
சோம்புத்தூள் – கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
தயிர் – 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பால் – 4 கப்
முந்திரிப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

வெங்காயம், சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும்.

சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி நன்றாக கழுவி வைக்கவும்.

ப.மிளகாயை கீறிக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து இரண்டரை டேபிள்ஸ்பூன் நெய் மற்றும் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்த பின்னர் இத்துடன் சின்னவெங்காயம், பெரியவெங்காயம், இரண்டையும் சேர்த்து சிவக்க வறுக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி மற்றும் பூண்டு விழுதுகளைச் சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும்.

அடுத்து அதில் பச்சைமிளகாய், நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் முக்கால் பாகம் புதினா மற்றும் கொத்தமல்லித்தழையை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் சிக்கனை சேர்த்து வதக்கி போதுமான அளவு உப்பைச் சேர்க்கவும்.

சிக்கனில் இருந்து எண்ணெய் பிரிந்துவரும்வரை வதக்கவும்.

இத்துடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள் மல்லித்தூள் (தனியாத்தூள்) சீரகத்தூள், சோம்புத்தூள், கரம் மசாலாத்தூள், தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

அடுத்து அதில் தேங்காய்ப்பால் ஊற்றி, சிக்கனை வேக விடவும். சிக்கன் வெந்ததும் கோதுமைக் குருணையைச் சேர்த்து 5 நிமிடங்கள் அடிபிடிக்காமல் கொதிக்க விடவும்.

கோதுமையும் கறி, தேங்காய் பால் சேர்ந்து கெட்டியானதும் தீயைக் குறைத்து 10 நிமிடங்கள் மூடி தம்மில் வைக்கவும்.

கலவை உப்புமா பக்குவத்துக்கு வந்தவுடன், புதினா, கொத்தமல்லித்தழை, வறுத்த முந்திரிப் பருப்பு சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

சூப்பரான கோதுமை ரவை சிக்கன் பிரியாணி ரெடி.wheat rava chicken biryani. jpg

Related posts

உங்க கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் இயற்கை உணவுகள் !

nathan

ஆஸ்துமாவை முற்றிலும் குணப்படுத்த இதோ எளிய நிவாரணம்!

nathan

இரத்த உற்பத்திக்கு சாப்பிட வேண்டிய உணவுகள் | Food Items That Will Increase Blood

nathan

உங்களுக்கு எலுமிச்சை சாற்று நீரை அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு!கல்லீரல் கோளாறுகளுக்கு சிறந்த பீட்ரூட் சூப்.

nathan

இறைச்சியை விட அதன் உறுப்புக்களை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த நோயாளிகளின் உயிருக்கு எமனாகும் பிரட்!

nathan

விரும்பி சுவைக்கும் முருங்கைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆச்சரிய நன்மைகள்

nathan

சுவையான கொத்தமல்லி துவையல்

nathan