cover 1530869452
மருத்துவ குறிப்பு

சளி, காய்ச்சல் வந்தா இனி மாத்திரை வேண்டாம்… சூப்பர் டிப்ஸ்

பழங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் பழங்களுக்கு கிருமிகளைக் கொல்லும் தன்மை உண்டு. அதிக அளவு வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துகள் உள்ளதால், பழங்கள், காய்ச்சல் மற்றும் சளியை கட்டுக்குள் வைக்கின்றன.

மேலும், பழங்களை தினசரி உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால், இதய நோய் மற்றும் புற்றுநோய்க்கான அபாயமும் குறைகிறது. சளி மற்றும் காய்ச்சலை விரட்டும் தன்மை கொண்ட ஐந்து பழ வகைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

ஆப்பிள் ஆப்பிள், அன்டி ஆக்சிடென்ட்களின் சிறந்த ஆதாரமாகும். ஒரு ஆப்பிள் 1,500 மில்லி கிராம் அளவுக்கு வைட்டமின் சி மற்றும் அன்டி ஆக்சிடெண்ட் குணங்களைக் கொண்டுள்ளது. பிளேவனைடு அதிகமாகக் காணப்படுகிற பழமாக ஆப்பிள் இருக்கிறது. இது இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டதான இருக்கிறது. அதிலும் சளி மற்றும் தொடர் காய்ச்சல் இருக்கும் நேரங்களில் வாய் கசப்பாக இருக்கும். எந்த உணவும் பெரிதாக சாப்பிடப் பிடிக்காது. அதனால் ஆப்பிளை கூழ் போய் மசித்து சூடு செய்து கூட சாப்பிடலாம்.

பப்பாளி வைட்டமின் சி யின் 250 சதவீத ஆர்டிஏவைக் கொண்டுள்ள ஒரு பப்பாளி சளி மற்றும் காய்ச்சல் போன்ற வியாதிகளை குணப்படுத்துகிறது. பப்பாளியில் காணப்படும் பீட்டா கரோடின், வைட்டமின் சி மற்றும் ஈ போன்றவை உடல் முழுவதிலும் உள்ள அழற்சியைக் குறைத்து, ஆஸ்துமா பாதிப்புகளைக் குறைக்கிறது. அதேபோல், பப்பாளியில் அதிக அளவில் வைட்டமின் ஏ அதிக அளவில் இருப்பதால், கண் பார்வை சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் தவிர்க்க முடியும்.

குருதி நெல்லி மற்ற காய்கறி மற்றும் பழங்களை விட குருதி நெல்லியில் அன்டி ஆக்சிடெண்ட் அதிகம் உள்ளது. ப்ரோகோலியை ஐந்து முறை சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள், இந்த பழத்தை ஒரு முறை உட்கொள்வதால் நமக்கு கிடைக்கிறது. ப்ரக்கோலியை விட ஐந்து மடங்கு குருதி நெல்லி ஒரு இயற்கை ப்ரோபயோடிக் ஆகும், ஆகவே இவை, குடலின் நல்ல பாக்டீரியா அளவை அதிகரித்து உணவினால் உண்டாகும் நோய்களைப் போக்க உதவுகிறது.

சாத்துக்குடி லிமோநோய்டு போன்ற இயற்கை கூறுகள் சாத்துக்குடியில் அதிகம் உள்ளது. இவை கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. சாத்துக்குடியில் மிக அதிக அளவில் வைட்டமின் சி மிக அதிகமாக உள்ளது.

வாழைப்பழம் வாழைப்பழம் வைட்டமின் பி 6ன் ஆதாரமாக விளங்குகிறது. வாழைப் பழம் சோர்வைப் போக்கி, மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையைக் குறைக்க உதவுகிறது. வாழைப் பழத்தில் மக்னீசியம் அதிகமாக இருப்பதால், எலும்புகள் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருக்க உதவுகிறது. இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை தடுக்க வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம் உதவுகிறது. அதோடு வாழைப்பழம் மலச்சிக்கல் உண்டாகாமல் தடுக்கும்.
cover 1530869452

Related posts

மருத்துவரின் பரிந்துரையின்றி பெண்கள் சாப்பிடக்கூடாத மாத்திரைகள்!!!

nathan

முதுகுத் தண்டுவடத்தை வலுப்படுத்து இலகுவான ஆசனம்!முயன்று பாருங்கள்…

nathan

பெண்களே பேஸ்புக் ரோமியோக்களிடம் இருந்து தப்பிக்க டிப்ஸ்..!

nathan

உயிரை குடிக்கும் சிகரெட்

nathan

இதோ எளிய நிவாரணம்! பிரசவத்திற்கு பின் தொங்கும் தொப்பையைக் குறைக்க உதவும் சில வழிகள்!

nathan

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய வெட்டிவேரின் மகத்துவம்

nathan

முருங்கைக்கீரையின் எளிய முறை மருத்துவம்

nathan

குழந்தைகளுக்கு நீரிழிவுநோய் ஏற்படுத்தும் பாதிப்புகள் -தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது என்பதை வெளிக்காட்டும் அசாதாரண அறிகுறிகள்!

nathan