201709211510515751 aloo paneer kofta SECVPF
ஆரோக்கிய உணவு

ஆலு பன்னீர் கோப்தா

மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன், சூடாக ஏதாவது சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். எப்போதும் பஜ்ஜி, போண்டா போன்றவற்றைதான் சாப்பிடுவோம். ஒரு மாறுதலுக்கு ஆலு பன்னீர் கோப்தா செய்து சாப்பிடுங்கள் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

பன்னீர் – 200 கிராம் (துருவியது)
உருளைக்கிழங்கு – 3 (வேக வைத்து, மசித்தது)
பால் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – 1 1/2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி, லேசாக தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். நமக்கு வேண்டிய வடிவத்தில் அவற்றை அடிவமைத்து கொள்ளலாம். பின்பு ஒரு காடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான். சுவையான ஆலு பன்னீர் கோப்தா தயார். இதனை தக்காளீ சாய்ஸ் உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.201709211510515751 aloo paneer kofta SECVPF

Related posts

சத்தான ஓட்ஸ் கட்லெட் செய்முறை விளக்கம்

nathan

முட்டைகோஸ் ஜூஸினால் இவ்வளவு நன்மைகளா?

nathan

ராகி உப்புமா

nathan

முள்ளங்கியை பச்சையாக சாப்பிட்டால் நல்லதா?

nathan

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை

nathan

சூப்பரான ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு

nathan

antioxidant benefits in tamil – ஆன்டி-ஆக்ஸிடெண்ட்

nathan

7 நாட்களில் 5 நாட்கள் சைவ உணவு அவசியம்.

nathan

தைராய்டு உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்!!!

nathan