201608020947480553 how to make nutritious tasty Broccoli poriyal SECVPF
ஆரோக்கிய உணவு

இந்த பொருட்களை மட்டும் சாப்பிடுங்க போதும் ஆயுளுக்கும் புற்றுநோய் உங்களை எட்டியே பார்க்காது!

தற்போதைய கணக்குப்படி பார்த்தால் எட்டு பெண்களில் சுமார் ஒரு பெண் மார்பக புற்று நோயால் அவதிப்படுகிறார். உலக உடல்நல அமைப்பு கருத்துப்படி 2020 ல் மார்பக புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தியாவை பொருத்த வரை மார்பக புற்று நோய் என்பது சாதாரணமாக பரவி காணப்படுகிறது. கருப்பை வாய் புற்று நோய்களும் இங்குள்ள பெண்களிடையே அதிகமாக காணப்படுகின்றன.
குடிப்பழக்கம், அதிகமான உடல் எடை மற்றும் பரம்பரை போன்ற காரணங்கள் மார்பக புற்று நோய் வர காரணமாக அமைகின்றன.
சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் 25 லிருந்து 30 சதவீதம் வரை இந்த மார்பக புற்று நோய் வருவதை குறைக்கலாம். தானியங்கள், நார்ச்சத்து உணவுகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் மார்பக புற்று நோய் வருவதை தடுக்க முடியும்.
நாங்கள் சொல்லும் இந்த உணவுகள் மார்பக புற்றுநோயை எதிர்த்து போரிடுகின்றன. அவற்றை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

மாதுளை பழம்
மார்பக புற்று நோயை தடுப்பதில் மாதுளை யை பரிந்துரைக்கின்றன. இதிலுள்ள பாலிபினோல், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்று நோய் வளருவதை தடுக்கிறது. மேலும் இரும்புச் சத்து உடலுக்கு கிடைப்பதால் மார்பக புற்று நோய் வராமல் தடுக்கிறது.

ப்ளூபெர்ரீஸ்
ப்ளூபெர்ரீஸ் எல்லாரும் விரும்பி சாப்பிடும் பழம். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மார்பக புற்று நோய் செல்களுக்கு எதிராக செயல்படுகிறது. இதற்கு புற்று நோயை உண்டாக்கும் அழற்சியை தடுத்து உடலை புற்று நோய் தாக்கத்தில் இருந்து காக்கிறது.

பிரேசில் நட்ஸ்
பிரேசில் நட்ஸில் செலினியம், நார்ச்சத்து மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் அடங்கியுள்ளன. இவை நமது நோயெதிர்ப்பு சக்திக்கு எதிராக ஏற்படும் அழற்சியை தடுத்து புற்று நோய் வளர விடாமல் தடுக்கிறது. இதை உங்கள் சாலட் உணவிலோ அல்லது தினசரி உணவிலோ சேர்த்து கொண்டால் மிகவும் நல்லது.

காளாண்
காளான்கள் மார்பக புற்று நோயை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இதை உங்கள் தினசரி உணவில் சேர்த்து கொண்டால் மார்பக புற்று நோய் வருவதை தடுக்கிறது. மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இது மிகவும் சிறந்தது.

அடர்ந்த பச்சை நிற காய்கறிகள்
பச்சை இலை காய்கறிகளும் நமக்கு புற்று நோய் வருவதை தடுக்கிறது. இதிலுள்ள விட்டமின் பி, நார்ச்சத்து, பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் குளோரோபைல் போன்றவை புற்று நோய் செல்களை உடைத்தெறிகிறது.

ப்ரோக்கோலி
இதிலுள்ள சல்பரோபோன் மற்றும் இன்டோல்ஸ் வெவ்வேறு விதத்தில் செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இவை மார்பக புற்று நோய், சிறுநீர்ப்பை புற்றுநோய், புரோஸ்டேட் புற்று நோய் மற்றும் நுரையீரல் புற்று நோய் போன்றவற்றை எதிர்த்து போரிடுகிறது.

பூண்டு
பூண்டு மார்பக புற்று நோய் வருவதை தடுப்பதோடு புரோஸ்டேட் புற்று நோய், குடல் புற்று நோய் போன்றவற்றிலிருந்தும் நம்மை காக்கிறது. இதிலுள்ள அலுயியம் புற்று நோயை எதிர்க்கும் பொருள். எனவே தினமும் காலையில் பூண்டு பல் சாப்பிட்டாலே போதும் புற்று நோய் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.

முட்டை
முட்டையில் உள்ள கொலைன் என்ற பொருள் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோயை வர விடாமல் தடுக்கிறது. எனவே பெண்கள் தினசரி உணவில் முட்டையை சேர்த்து கொள்வதன் மூலம் புற்று நோய் தாக்கத்தில் இருந்து காத்து கொள்ளலாம்.201608020947480553 how to make nutritious tasty Broccoli poriyal SECVPF

Related posts

பனங்கிழங்கை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

skin benefits of watermelon – சருமம் பொலிவாக தர்பூசணி

nathan

கட்டாயம் இதை படியுங்கள் அற்புதபலன்கள் தரும் வறுத்த பூண்டு.!

nathan

பசலைக்கீரை மிக அதிக அளவில் வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன…

nathan

சூப்பரான வெள்ளரிக்காய் எலுமிச்சை ஜூஸ்

nathan

கொய்யா இலையின் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு இயற்கை உணவுகள் உங்களுக்கு பிடிக்குமா? இத ட்ரை பண்ணி பாருங்க,…

nathan

கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதியா? அப்ப இதை சாப்பிடுங்க

nathan

கேரட் உருளைக்கிழங்கு சூப்

nathan