கரியும், மரக்குச்சிகளும் கொண்டு தான் பல் துலக்கி வந்தோம். திடீரென கரி கருப்பு, பற்பொடி வெளுப்பு என கருப்பு, வெள்ளை விளம்பரம் செய்து, அழகை முன்னிறுத்தி பற்பொடி இந்தியாவில் நுழைந்தது, பிறகு அது டூத்பேஸ்ட்டாகி அதற்கு ஒரு டூத் பிரஷ் பிறந்தது. இவற்றின் வருகையால் நமக்கு பல் வலி, ஈறு பிரச்சனைகள் இலவச இணைப்பாக வழங்கப்பட்டது. இப்போது மூன்று தசாப்தங்கள் கடந்து வந்து, இல்ல, இல்ல கரி தான் நல்லது என்கிறான் மேற்கத்தியன். இதில் மடையன் ஆனது யார்? நம்பி ஏமார்ந்தது யார்? இதோ, இந்த மரக்குச்சிகளை பயன்படுத்தினால் பற்களின் நலம் மேலோங்கும்…
பழமொழியும், வாலியின் வரிகள்! “ஆலும் வேலும், பல்லுக்கு உறுதி” என்பது பழமொழி. இதை போன்ற வரிகளை கவிஞர் வாலியும் “ஆலப்போல், வேலப்போல், ஆலம் விழுது போல்…” ஒரு பாடலில் எழுதியுள்ளார். ” Loading ad இந்த வரிகள் எல்லாம் ஆலமர குச்சிகளும், கருவேல குச்சிகளும் பற்களுக்கு அளிக்கும் ஆரோக்கியத்தை குறிக்கின்றன.
சிந்தாமணி பாடல்! ‘வேலுக்குப் பல்லிறுகும் வேம்புக்கு பல் துலங்கும் நாயுருவி கண்டால் வசீகரமாங் காண்’ என்ற சிந்தாமணி பாடலிலும் வேலமர குச்சிகள் பல்லுக்கு ஆரோக்கியம் மற்றும் உறுதி ஏற்படுத்தி கொடுக்க கூடியது என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த பாடலில் வேப்பங்குச்சி பற்களை பளிச்சிடவும், தூய்மைப்படுத்தவும் உதவுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனைய பல் துலக்க பயன்படும் குச்சிகள்! ஆலமர, வேப்பமர குச்சிகள் மட்டுமின்றி மா, தேக்கு, மறுத்து, நாவல், விழா, நொச்சி, புங்கை மரத்தின் குச்சிகளும் கூட பல் துலக்க, பற்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்த பயன்படுத்த உதவுகிறது என பல மருத்துவ குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது.
துவர்ப்பு சுவை! துவர்ப்பு சுவை உடைய குச்சிகள் ஈறுகள் சார்ந்த பிரச்சனைகள், ஈறு புண், ஈறுகளில் இரத்தம் வருதல் போன்ற ஈறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் பண்பு நலம் கொண்டவை.
கசப்பு சுவை! கசப்பு சுவை உடைய குச்சிகள், பற்களில் பாக்டீரியா கிருமிகள் அண்டாமல், பற்களுக்கு பாதுகாப்பாக விளங்கி, ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பற்களை தூய்மை படுத்தவும் உதவும் பண்பு நலம் கொண்டவை.
எப்படி குச்சிகளை தேர்ந்தெடுப்பது? பல் துலக்க குச்சிகளை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். பசுமையான மரங்களில் இருந்து குச்சிகளை எடுக்க வேண்டும். அவற்றை நீரில் கழுவி சுத்தம் செய்து. ஒரு பக்க நுனியை பற்களால் கடிதோ, தட்டியோ பிரஷ் போல செய்துக் கொள்ளுங்கள். பிறகு, பற்கள், பற்களின் இடையே, ஈறுகளில் மென்மையாக தேய்த்து பற்களை சுத்தம் செய்யுங்கள்.