30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
1 25 1500982085
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் 10 ஆரோக்கிய நன்மைகள்!

வாரத்தில் குறைந்தது ஒரே ஒரு முறையாவது கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். சிலர் இதனை கடைப்பிடிக்கிறார்கள். பலர் இதனை கடைப்பிடிப்பதில்லை. நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் பல நாம் அன்றாடம் சாப்பிடும் உணவின் மூலமாகவே கிடைத்துவிடுகின்றன.

ஆனால் நாம் சரியான சரிவிகித உணவை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம். குழந்தைகள், பருவமடைந்த பெண்கள், ஆண்கள், நடுத்தர வயதினர், முதியோர் என அனைவருக்கும் சரிவிகித உணவு அவசியமாகிறது. கீரை வகைகளில் சிறந்தது என பொன்னாங்கன்னி கீரை அழைக்கப்படுகிறது. இது தங்கமான நிறத்தை சருமத்திற்கு தருகிறது. இதன் மருத்துவ பலன்களை இந்த பகுதியில் காண்போம்.

1. உடல் எடை குறைய உடல் எடை குறைய சரியான ஆரோக்கியமான டயட் அவசியம். இதற்கு பொன்னாங்கன்னி கீரை உதவுகிறது. பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

2. உடல் எடை அதிகரிக்க பொன்னாங்கன்னி கீரை உடல் எடையை அதிகரிக்க மட்டுமில்லாமல் கூட்டவும் உதவுகிறது. துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பது பொன்னாங்கண்ணி கீரையின் தனித்தன்மை. பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டால், உடல் வலிமை பெரும்.எலும்புகள் உறுதியாகும்

3. வாய் துர்நாற்றம் போக வாயில் இருந்து வரும் துர்நாற்றம் நமது பலவீனமாக அமையும். பொன்னாங்கன்னி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம் போகும்.

4. சுறுசுறுப்பாக செயல்பட பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடுவதால், இதயம் மற்றும் மூளை புத்துணர்வு பெறுகிறது. இதனால் நாம் சுறுசுறுப்பாக செயல்பட முடிகிறது.

5. குணப்படுத்தும் நோய்கள் பொன்னாங்கண்ணி கீரை மூலநோய் மற்றும் மண்ணீரல் நோய்களைப் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

6. கண் பார்வை பொன்னாங்கன்னி கீரையை தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பகலிலும் நிலவை பார்க்கலாம். அந்த அளவுக்கு கண் பார்வை நன்றாக தெரியும்.

7. இரத்தம் சுத்தமாக.. பொன்னாங்கண்ணி கீரையை நன்றாக நீரில் இட்டு கழுவி, சிறிது சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும்.

8. கண் சிவத்தல் நீங்க இரவு சரியாக தூக்கமில்லாத காரணத்தாலும், நீண்ட நேரம் செல்போன், கணிணி போன்ற எலட்ரானிக் சாதங்களை பார்ப்பதாலும் கண்கள் சிவந்து காணப்படுகிறது. இதனை போக்க பொன்னாங்கண்ணி கீரையை பொறியல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனை நீங்கும்.

9. பொன்னிறமாக மாற பொன்னாங்கன்னி கீரை தங்கம் போன்ற சருமத்தை தரும் ஆற்றல் கொண்டது. இந்த கீரையை சாப்பிட்டால் அழகு மேம்படும்.

10. வீட்டிலேயே வளர்க்கலாம் பொன்னாங்கண்ணி கீரையின் தண்டுகளை கிள்ளி மண்ணில் ஊன்றி வைத்தாலே கீரை செடி நன்றாக வளர்ந்து விடும். இதனை நீங்கள் வீட்டிலேயே வளர்க்கலாம்.

1 25 1500982085

Related posts

ஃபுட் பாய்சன் இலிருந்து பாதுகாத்துக்கொள்ள இவைகளைச் செய்தாலே ? போதும் உணவு ஒவ்வொமை வராமல் நமது உடலை பாதுகாத்து கொள்ளலாம். …

sangika

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…சிக்ஸ் பேக் வைக்க முயற்சிக்கும் போது சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

nathan

அருமையான முட்டை வறுவல்

nathan

சுவையான சத்தான பேபி கார்ன் சூப்

nathan

கம்மங்கூழ் குடிங்க… தொப்பையும் குறையும், சூடும் தணியும்

nathan

காலை வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை! தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

மணத்தக்காளி கடைசல்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… காய்கறிகளை வாங்கும்போது கட்டாயம் இதையெல்லாம் கவனித்து வாங்குங்கள்..

nathan

தெரிஞ்சிக்கங்க…வைரஸை எதிர்க்கும் அன்றாட உணவுப் பொருட்கள்

nathan