இன்றைக்கு பெரும்பாலானோர் மருத்துவ ரீதியாக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு மருத்துவக் குறிப்பாக இந்த உணவு நல்லது என்று சொன்னால் போதும் மூன்று வேலைக்கும் சாப்பிடுவது தொடர்கிறது.
என்ன தான் உடல் நலத்திற்கு நல்லது என்றாலும் அது அளவுக்கு மீறினால் நஞ்சாகத்தான் முடியும். அப்படி நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள் பூண்டு. அதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு என்றாலும் அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால் என்னென்ன தீமைகள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
கல்லீரல் பாதிப்பு :
பூண்டில் அதிகப்படியான ஆண்ட்டிஆக்ஸிடண்ட் இருக்கிறது. இவற்றை அதிகமாக எடுக்கும் போது ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அதிகம் சேர்ந்து கல்லீரல் பாதிப்படையும்.
நாற்றம் :
தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால் கெட்ட நாற்றம் வரும். கெட்ட நாற்றம் ஒருவரின் தன்னம்பிக்கையையே குழைத்து விடும் ஆற்றல் உள்ளது .
நாற்றம் வந்தாலே நாம் சுத்தமாக இல்லை என்று அர்த்தமன்று மாறாக உணவில் இப்படியான பொருட்களை அதிகமாக சேர்த்திருப்பார்கள்.
பூண்டில் இருக்கும் வேதிப் பொருள் ரத்தத்தில் கலந்து வாயுவாக மாறும்போது இப்படியான நாற்றம் வெளிப்படும்.
நெஞ்செரிச்சல் :
தேசிய புற்றுநோய் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, பூண்டினையோ அல்லது பூண்டு அதிகமாக சேர்த்த உணவினை வெறும் வயிற்றில் உட்கொண்டால் அது வாந்தி மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
இதே போல ஹார்வேர்ட் மெடிக்கல் ஸ்கூல் வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி,பூண்டினை தொடர்ந்து மிக அதிகமாக எடுத்துக் கொண்டால் அது GERD எனப்படுகிற gastroesophageal reflux disease உண்டாகும்.
ரத்த ஓட்டம் :
மேரிலாண்ட் மெடிக்கல் செண்ட்டர் சமர்ப்பித்திருக்கும் ஆய்வறிக்கையின் படி பூண்டு ரத்தம் உறைதலை தாமதப்படுத்துகிறது. ஏதேனும் காயம் ஏற்ப்பட்டு ரத்தம் வந்தால் குறிப்பிட்ட நேரத்திற்குள் ரத்தம் வெளியேறுவது நிற்க வேண்டும். மாறாக தொடர்ந்து ரத்தம் வந்து கொண்டேயிருந்தால் அது ஆபத்து.
பூண்டு தொடர்ந்து எடுப்பதால் ரத்தம் உறையும் நேரம் அதிகரிக்கும் என்கிறார்கள். ரத்த ஓட்டத்திலும் மாற்றங்களை கொண்டு வரும். இதனால் ஏதேனும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளயிருப்பர்கள், அறுவை சிகிச்சைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே பூண்டு அதிகமாக சேர்ப்பதை தவிர்த்திடுங்கள்.
சரும பாதிப்பு :
பூண்டில் இருக்கும் நுண்ணிய தாதுவான ஆலின் லயேஸ் சிலருக்கு சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தக்கூடியது. தொடர்ந்து இது உடலில் அதிகமாக சேரும் பட்சத்தில் சருமம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
கண் பிரச்சனை :
நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். மிக அதிகமாக பூண்டு உடலில் சேரும் போது அது ஹைப்ஹீமா(hyphema)என்கிற பாதிப்பை உண்டாக்கும். இதனால் கண்ணுக்கு உள்ளே இருக்கும் சேம்பரில் ரத்தக்கசிவு உண்டாகும்.
பூண்டில் இருக்கும் ஆண்டிகொயாகுலண்ட் தான் இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
இதற்கு உரிய சிகிச்சை எடுக்காமல் தொடர்ந்து பூண்டு சேர்த்து வந்தால் கண் பார்வையே பறிபோகும் அபாயமும் உள்ளது.