கற்றாழை ஒரு சிறந்த மூலிகை பொருள் ஆகும். இது, பல உடல்நலக் குறைகளுக்கு நல்ல தீர்வளிக்கும் மருத்துவ குணம் வாய்ந்துள்ளது. முக்கியமாக முடி வளர வேண்டும், இளநரை போக்கி கருமையான முடி வேண்டும் என்று விரும்புவோர் கற்றாழையை வீட்டிலேயே வளர்க்க துவங்கலாம்.
கற்றாழையின் சிறந்த நன்மைகளில் ஒன்று முடியை கருமை ஆக்குதலும், முடி உதிர்வதை நிறுத்தி, முடி வளர உதவுவதும் ஆகும். ஆண்கள் மத்தியில் மன அழுத்தம் அதிகரிப்பதற்கு ஒருவகையில் முடி உதிர்தலும் காரணமாகும்.இனி, உடல்நலனுக்கும், முடியின் ஆரோக்கியத்திற்கும் நல்ல தீர்வளிக்கும் கற்றாழையின் நன்மைகள் பற்றி பார்க்கலாம்…
கருமையாக முடி வளர!
கற்றாழை சாறுடன், நெல்லிக்காய் சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி கூந்தலில் தடவி வந்தால் முடி கருமையாக வளரும்.தலை முடி வளர!தலை முடி வளர கற்றாழை சதை பகுதியை எடுத்துக் கொண்டு அதன் மீது படிகார பொடியை தூவுங்கள்.
இப்போது, கற்றாழை சோற்றுப் பகுதியில் இருந்து நீர் பிரிந்து வந்து விடும். இந்த நீருக்கு இணையாக தேங்காய் என்னை கலந்து சுண்ட காய்ச்சுங்கள். காய்ச்சிய அந்த தைலம் போன்ற திரவத்தை தினமும் தலையில் தேய்த்து வந்தால் முடி நன்றாக வளரும்.
சிறுநீர் எரிச்சல் குறைய!
சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள், கற்றாழைத் துண்டுகளை சாப்பிட்டு வந்தால் எரிச்சல் குறையும்.
வயிறு வலி!
கற்றாழைத் துண்டு, வெங்காயம், பனங்கற்கண்டு, விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி சாப்பிட்டால் வயிறு வலி குறையும்.
நகச்சுற்று குறைய!
நகச்சுற்று இருப்பவர்கள் கற்றாழையுடன்,மஞ்சள் பொடியையும் அரைத்து விளக்கெண்ணெய் சேர்த்து சூடு செய்து, லேசான சூட்டில் நகத்தின் மீது பூசினால், நகச்சுற்று வலி குறையும்