26.2 C
Chennai
Sunday, Nov 24, 2024
201802271506200451 small onion puli kulambu SECVPF
ஆரோக்கிய உணவு

சின்ன வெங்காய புளிக்குழம்பு (கேரளா ஸ்டைல் )

இன்று கேரளாவில் மிகவும் பிரபலமான உளி தீயல் என்று அழைக்கப்படும் சின்ன வெங்காய புளிக்குழம்பை எப்படி செய்வதென்று விரிவாக பார்க்கலாம்.

கேரளா ஸ்டைல் சின்ன வெங்காய புளிக்குழம்பு
தேவையான பொருட்கள் :

சின்ன வெங்காயம் – 1/2 கப் (தோலுரித்தது)
புளிச்சாறு – 1/4 கப்
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
[பாட்டி மசாலா] மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
[பாட்டி மசாலா] சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு:

துருவிய தேங்காய் – 1/2 கப்
மல்லி – 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 3
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்

தாளிப்பதற்கு :

தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
வரமிளகாய் – 2

செய்முறை :

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு, குறைவான தீயில் வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.

பின்பு அதில் [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] மிளகாய் தூள் மற்றும் [பாட்டி மசாலா] சீரகப் பொடி சேர்த்து வதக்கி, பின் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதப்பி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் புளிச்சாறு ஊற்றி, குழம்பு சற்று கெட்டியாக வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

குழம்பானது கெட்டியாகி, குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் போது, அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறினால், கேரளா ஸ்டைல் சின்ன வெங்காய புளிக்குழம்பு ரெடி!!!201802271506200451 small onion puli kulambu SECVPF

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க… ஏழே நாட்களில் உடல் எடை குறைக்கனுமா? இந்த அற்புத பானங்கள் தினமும் குடிங்க

nathan

உங்களுக்கு தெரியுமா சாதம் வடிச்ச கஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் ஆரோக்கியமான உணவுகள் – தெரிஞ்சிக்கங்க…

nathan

சுவையான இனிப்பு போளி செய்வது எப்படி?

nathan

இரவில் படுக்கும் முன் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் பருகினால் ஏராளமான நன்மைகள்….

nathan

உங்களுக்கு தெரியுமா மலை நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

நீரிழிவு நோயாளிகள் சிகப்பு இறைச்சியை சாப்பிடலாமா?தெரிந்துகொள்வோமா?

nathan

சத்தான கம்பு உருண்டை செய்வது எப்படி

nathan

உங்க முகத்தை வைத்தே உங்களுக்கு பிறக்கப்போவது என்ன குழந்தைனு தெரிஞ்சுக்கனுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan