download
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா பனங்கிழங்கை இந்தப் பொருளுடன் இப்படி செய்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்…!

கற்பக விருட்சம்’ என்று அழைக்கப்படுகின்ற பனை மரம் அதிக காலம் உயிர் வாழும் அதிசயம் நிறைந்தது. அதில் இருந்து கிடைக்கக்கூடிய அனைத்து பொருட்களும் பயன்தரக்கூடியது. மரத்தில் இருந்து பனம்பழத்தை வெட்டி குழியில் போட்டு புதைத்து, பனங்கிழங்கு சாகுபடி செய்கிறார்கள். இது பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.

பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும். பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்.

இதனுடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் பலம் பெறும். பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும். பனங்கிழங்கு வாயு தொல்லை உடையது. எனவே இதை தவிர்க்க பனங்கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம். இனிப்பு தேவைப்படுகிறவர்கள் கருப்பட்டி சேர்த்து இடித்து சாப்பிடலாம்.

பனங்கிழங்கில் நார் சத்தும் அதிகம் இருப்பதால் இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பூமியில் இருந்து பனங்கிழங்கை பிரித்தெடுக்கும்போது விதையில் இருந்து தவின் கிடைக்கும். தவின் சாப்பிட்டால் வயிற்று வலி, ஒற்றை தலைவலி உள்ளிட்ட நோய்கள் குணமாகும்.

வயிறு, மற்றும், சிறுநீர் பாதிப்பு பிரச்சினை உள்ளவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.download

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரஷ்ஷான சிக்கனை எப்படி கண்டுபிடிப்பது?

nathan

குளிர்காலத்தில் மஞ்சளை உணவில் ஏன் அடிக்கடி சேர்த்துக் கொள்ளணும் தெரியுமா?

nathan

உலர் ஆப்ரிகாட் பழங்களில் உள்ள சத்துக்கள்

nathan

தெரிந்துகொள்வோமா? யாரெல்லாம் பப்பாளி சாப்பிடக்கூடாது? பப்பாளி சாப்பிடும் போது செய்யக் கூடாதவைகள் என்ன தெரியுமா?

nathan

வெயில் காலத்துல நீங்க தர்பூசணி ஜூஸ் குடிக்கலாமா?தெரிந்துகொள்வோமா?

nathan

சிறந்த மருந்து மாஇஞ்சி தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா ஜப்பான் மக்கள் நீண்ட நாள் உயிர் வாழ இது தான் காரணமா?

nathan

எச்சரிக்கை! இதெல்லாம் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாதா..?

nathan

பேரிச்சம் பழத்தின் நன்மைகள்!

nathan