ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் பீன்ஸ் கட்டுப்படுத்துகின்றது ..!

சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு பீன்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

பீன்சில் உள்ள கார்போஹைட்ரேட் மெதுவாகக் கரைவதால் அது ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்வதைத் தடுப்பதாகக் கூறப்படுகிறது.அது மட்டுமல்ல, பீன்சில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன.

தொடர்ந்து பீன்ஸ் சாப்பிட்டுவந்தால் அதில் உள்ள பிளேவனாய்டுகள், புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து அந்நோய் வராமல் தடுக்கும்.வேகவைத்த காய்களை மனிதக் குடல் எளிதில் ஜீரணிப்பதுடன், அதன் சத்துகளை எளிதாக உட்கிரகிக்கும்.

வேகவைத்த பீன்சை சாப்பிட்டால், அது குடலியக்கத்தைச் சீராக்கி, செரிமானப் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.100 கிராம் பீன்சில் நார்ச்சத்தின் அளவு 9 சதவீதம். இந்த நார்ச்சத்து, குடலின் உட்புறச் சுவர் களைப் பாதுகாத்து, நச்சுத் தன்மைகளை வெளியேற்றும்.

பீன்சில் ஆன்டி ஆக்சிடன்ட்டுகள், புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம், போலேட், தாமிரம், இரும்புச்சத்து, மாங்கனீஸ், பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகிய கனிமச் சத்துகள் இருப்பதால், இது உடலில் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கும், உடலின் ஆரோக்கியம் காக்கும், இதயத்துக்கும் இதம் சேர்க்கும்.

பீன்சில் உள்ள சிலிக்கான், எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. மற்ற காய்கறிகளைவிட பீன்சில் உள்ள சிலிக்கான் எளிதில் உறிஞ்சப்படுவதோடு, செரிமானமும் அடையும்.பச்சை பீன்சில் உள்ள கரோட்டினாய்டுகள் சருமத்தின் ஆரோக்கியம் காக்கும், முதுமை அறிகுறிகளை தள்ளிப்போட உதவும்.

Related posts

கர்ப்பிணி பெண்கள் வ்வாமையை ஏற்படுத்தும் உணவுகள் தவிர்த்துவிட வேண்டியது நல்லது.

nathan

ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

நெருஞ்சில் பொடி – nerunjil powder benefits in tamil

nathan

நோயற்ற வாழ்விற்கு சாதாரண அரிசியை விட சிவப்பு அரிசி தான் பெஸ்ட்

nathan

குழந்தைகளுக்கு எந்த வயதில் அசைவ உணவை கொடுக்கலாம் என்று தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

ஆரோக்கியம் காக்கும் ஆவாரம்பூ கஷாயத்தின் மருத்துவ பயன்கள்…!!தெரிந்துகொள்வோமா?

nathan

படிங்க இது தெரிந்தால் இனிமேல் வெங்காயத்தோலை குப்பையில் போடமாட்டீர்கள்..!

nathan

தொண்டை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சுக்கு மிளகு பால்

nathan

ஓட்ஸ் டயட் இட்லி : செய்முறைகளுடன்…!

nathan